Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள்

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் அதிக நீர்ச்சத்து காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல் லது லேசாகவேக வைத்தோ உட் கொண்டால்தான் அதிகள விலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும்.

காய்கறிகளைப் போன்று பழங்களி லும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய் கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கி றோமோ அந்த அளவுக்கு நல்லது. கோடைவெயிலில் சிறிது தூரம் நடந்தாலே வியர்த்துக் கொட்டி விடும்.

வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய அரிப்பு வராது. வெங்காயத்தில் உள்ள “குவர்ச டின்” என்று வேதிப் பொருள் அதற்கு உதவுகிறது. இப் போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீ­ர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறை ய நீர்ச்சத்து உள்ளது.

அதனால் இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள். காய் கறிகளைக் கொ ண்டு சூப் தயார் செய்து அதை குளிர வை த்து உட் கொள்வதும் சிறந்தது என்கிறார்கள் அமெரிக்க மருத் துவர்கள். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடை காலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். வெயிலின் தாக் கம் தாங்காமல் நாம் குளிராக எது கிடைத்தாலும் குடிப்போம், சாப்பிடு வோம்.

நம்முடைய பலவீனத்தைத் தெரிந்து கொண்டு தான் கலர், கலரான குளிர்  பானங்களை எல்லாக் கடைகளிலும் விற்கி றார்கள். தாகம் அடங்க வேண் டும் என்பதற்காக அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம். இந்த குளிர் பானங்களால் உடலில் தேவை யற்ற கலோரி தான் சேருமே தவிர வேறு எந்தவித பலன்களும் கிடையாது என்கிறார்கள் மரு த்துவர்கள். இப்போதெல்லாம் ஐஸ் காபி, ஐஸ் டீ ஆகிய வையும் அமோகமாக விற்பனையாகின்றன.

Ice Coffee, Ice Tea

ஆரோக்கியம் கருதி இவற் றை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்து எடுக்கும் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை இந்த கோடையில் முடிந்த வரை தவிர்ப்பது இன்னொ ரு ஆரோக் கிய ரகசியம். வெயில் நேரத்தில் வெ ளியே செல்ல நேரிட்டால் சுத்தமான குடிநீரை கை யோடு கொண்டு செல்லு ங்கள். இல்லை யென்றால் இயற் கை பானமான இளநீரை வாங்கி குடியுங்கள்.

மோர், எலுமிச்சை பழச்சாறு ஆகிய வையும் நல்லது தான். அதே நேரம் அவற் றில் சேர்க்கப்படும் தண்­ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். முடிந்த வரை அவற் றை நீங்களே வீட்டில் தயார் செய்து உட்கொ ள்வது தான் சிறந்தது. தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வரண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.

தோல் நீக்கிய ஆப்பிள் பழத் தை நன்றாக மசித்து அதனு டன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து அந்த கலவை யை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டு முகத்தை கழுவ வும். வெயிலின் தாக்க த்தால் பாதிப்புக்குள்ளான உங் கள் வறண்ட சருமம் பொலிவு பெறும். தினமும் காலை, மாலை இரு வேளை குளியுங்கள்.

காலைக் குளியலின் போது மட்டும் தலை மற்றும் உடல் முழு வதும் தேங்காய் எண்ணெய் தேய்த்து நன்றாக ஊறவிட்டு அதன் பின் குளிப்பது நல்லது. இப்படிச் செய்வதால் உடல்சூடு குறை யும். மாலை யில் எண்ணைக் குளியல் ஆகவே ஆகாது.

கோடையில் கண்கள் எளிதில் சோர்ந்து போய்விடுவதால் எரிச் சல் கொடுக்க ஆரம்பித்து விடும். அதைப் போக்க இரவில் தூங் கும் முன் கண்களை சுற்றி விளக்கெண்ணெயை தடவி விடுங் கள். கண்கள் குளிர்ச்சி பெறும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: