1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள் விகள் சந்தேகங்கள் இருக்கும். தய ங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டு விடுங் கள். ஆரம்பத்திலேயே நேர டியாகக் கேட்பது மிக நல்லது. நேரடியாகக் கேட்டு பிரச்சினை களை ஆரம்பத்திலேயே தீர்த்து விடு ங் கள்.
2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிரு க்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ண ங்களைக்கூறுங்கள்! கண வனின் கருத்தையும் கேளு ங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும் போது வாழ்க்கை இன்பமான சுமை யாக இருக்கும்.
3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதார ண வேலையில் இருக் கலாம் புகழ் அற்றவராக இருக்க லாம். ஆனால் வீட்டு க்கு அவர்தான் ராஜா என்று அவர் உணர வேண்டும் (வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெ டுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ் லாதான் வேறென்ன!!)
4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சி னைக ளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். ஆண் கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றி பெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடு ங்கள். நிறைய வீடுகளில் வாக்கு வாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப் படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.
5. உங்கள் கணவனை வேறு ஆண் களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர் களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவரு க்கே உரிய குணங்களுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!
6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சி னைகள், அவர் நண்பர் களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனு டைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவி டுவீர்கள்.
7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கி றேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக் காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோ சனை என்ற முக்கியமான விசயங் களை கணவன் அசிர த்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யு ங்கள்.
8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன் கூட்டியே தீர்மானியுங்கள். கண வனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.
9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவரு டைய மரியாதையைக் கட்டாயம் காப்பா ற்றுங்கள். கணவ னுக்கு மதிப்பளிக்காத நபரோ, இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.
10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச் சொன் னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திரு க்கும். ஆனால் அதை நிறையப் பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்கு வாதம் செய்யும் ஒவ்வொரு முறை யும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.
11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப் பறிந்து நாம் கேட்காம லேயே எல்லாம் வாங்கி த்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல் லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப் பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்து விடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல் லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற் றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?
12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடா ரமாக வீட்டை மாற்றுங்கள்.
13.கணவன் சில காகிதங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்து வைத்திருக்கக்கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாத வையாகத் தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய் கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.
14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச் சுவை களை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பி யுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கு ம். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந் தோசமும் நகைச் சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.
15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள் ளுங்கள்.. தன்னைப் பற்றியே வெறுப் பில் உள்ளோ ரைச் சுற்றி எப்படி மகிழ் ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பி யுங்கள். தன்னை ரசிப் பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச் சியும்,அவர்களைச் சுற்றியி ருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக் கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.
16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை அறை யில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப் பீர்கள். இது மிகவும் தவறு. ஈகோ உடைக்க ப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்த மில்லை. இங்கு கட்டு டைப்பது நீங்களாகவே இருந்து விட்டுப்போங்களேன். ஆரம் பித்தபின் நீ தான் ஆரம் பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப் போவதி ல்லை. தாண்டுங்கள் கூச்ச த்தை!!!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது