Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விக்கல் என்றால் என்ன?

எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது.

அதன் தசைநார்கள் திடீரென வும் தன்னிச்சையாகவும் சுரு ங்கி விரிந்து செயற்படும்போதே விக் கல் ஏற்படுகிறது.

தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவை யோ இன்றி உங்கள் கட்டுப்பா ட்டை மீறி தானகவே இன்றி நடக் கும் செயற்பாடு எனலாம்.

விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம்.

பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன. சில நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது மிகக் குறைவே.

அவ்வாறு ஏற்படும் போது பொதுவாக நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் ஒருவர் விக்கக் கூடும்.

குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவமும் தேவைப்படாது.

குறுகிய நேரம் மட்டுமே நீடிக்கும் சாதாரண பிரச்னையாயினும் பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச்ச லையும், மற்றவர்கள் மத்தியில் அவமான உணர்வையும் ஏற்படு த்தலாம்.

வீட்டுச் சிகிச்சை
அவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் நிவாரணம் அளிக் கக் கூடும்.

உதாரணமாக சுத்தமான பொலிதீன் அல்லது பேப்பர் பையை எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்துச் சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே சுவாசிப்பது. அதாவது சுவாசிக்கும் காற்றை வெளியே விடாது அதனையே திரும்பத் திரும்ப சற்றுநேரம் சுவாசிக்க விக்கல் நின்றுவிடும்.

அதேபோல விக்கும் போது ஐஸ்வாட்டர் போன்ற குளிர்ந்த நீரைக் குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவலாம்.

சில தருணங்களில் மருத்துவரிடம் சென்று குறுகிய கால மருந் துகள் எடுக்கவும் நேரிடலாம். (Gaviscon) போன்ற மருந்துகளும் உதவலாம்.

Chlorpromazine, Haloperidol, Gabapentin, Metoclopramide போன்ற பல மருந்துகள் உதவும். ஆயினும் இவை எவற்றையம் மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே வாங்கி உபயோகி க்கக் கூடாது .

மேற் கூறியவாறு விக்கல்கள் குறுகிய நேரப் பிரச்சனையாக இருக்க சில வேளைகளில் மட்டுமே விக்கல்கள் நீண்ட நேரம் தொடர்வதுண்டு.
குறு கிய நேர விக்கல்கள் பொதுவாக

Phrenic Nerve போன்ற நரம்பு மற்றும் பிரிமென்தகடு உறுத்தப் படுவதாலேயே ஏற்படுகின்றன.
விக்கல் ஆண் பெண் எனப் பேதம் பாரப்பதில்லை. நீண்ட காலம் தொடரும் விக்கல்கள் பொதுவாக ஆண்களை அதிகம் பாதிக் கிறதாம்.

நீண்ட நேரம் விக்கல் எடுப்பது நோயாளியைக் களைப்படையச் செய்வதுடன், உணவு உண்பதையும், நீராகாரம் உள் எடுப்ப தையும் பாதிக்கக் கூடும். அவ்வாறாயின் நாளம் ஊடாக சே லைன் ஏற்றுவது உதவலாம். எவ்வாறாயினும் விக்கல் என்பது மரணத்தின் வாசல்படி அல்ல.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: