Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாய்பாபா வாழ்க்கை வரலாறு..

ஆன்மிகத் தலைவர் சத்ய சாய்பாபா, ஆன்மிகம், சமூக சேவை, மனிதநேயம், அன்பு, பண்பு, அறி வால் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களின் உள்ள த்தில் இடம்பெற் றவர். இந்த நூற்றாண்டின் சிறந்த ஆன் மிகத் தலைவரான சத்ய சாய் பாபா வின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:
* 1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கட ப்ப ராஜு & ஈஸ்வரம் மா தம்பதியரின் மகனாக சத்ய சாய்பாபா பிறந் தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.
*  1940, மார்ச் 8: சாய்பாபா தனது 14வது வயதில், புட்டபர்த்திக்கு அரு கே உள்ள உரவகொண்டா என்ற இடத் தில் தேள் கடித்து மயக்க மடைந்தார். மயக் கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தார், அழு தார், பாடினார். அவரது செயல்கள் புரியாத புதிராக இருந்தன. அன்று முதல் அவரது வாழ்க்கை திசை மாறியது என்கிறார் அவரது சகோதரர் சீஷம்மா ராஜு. 
* 1940, மே 23: சாய்பாபா தனது பெற்றோர், சகோதரர்களை அழைத்தார். அனைவரின் முன்னிலையில் காற்றிலிருந்து இனிப்பு, விபூதி உள்ளிட்ட  பொருட்களை வரவழைத்து கொடுத் தார். தனது மகனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று நினைத்து பிரம்பை எடுத்து, ‘யார் நீ, உனக்கு என்ன வே ண்டும்’ என்று கேட்டார். அதற்கு சாய் பாபா, ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்’ என்றார். அன்று முதல் சத்யநாராயண ராஜு, சத்ய சாய்பாபா என்று அழைக்கப் பட்டார்.   
* 1944: சாய்பாபா, குடும்பத்தில் இரு ந்து பிரிந்து புட்டபர்த்தி அருகே கட்டப் பட்டுள்ள கோயிலில் வசிக்கத் தொட ங்கினார். ஆன்மிக பயணமாக பெங்க ளூருக்கு சென்றார். தூய வெள்ளை நிறத்தில் நீண்ட சட்டை மற்றும் வேஷ்டி கட்டியிருந்தார். பின்னர் காவி உடைக்கு மாறினார்.
* 1950, நவம்பர் 23: புட்டபர்த்தியில் Ôபிரசாந்தி நிலையம்Õ என்ற பிரமாண்ட ஆசிரமம் கட்டி, சாய்பாபா தன து 28வது பிறந்த நாளில் திறந்து வைத் தார்.  
* 1957, அக்டோபர்: பிரசாந்தி நிலைய வளா கத்தில் இலவச மருத்துவமனையை திறந்தார்.   
* 1968, ஜூன் 29: சாய்பாபா, முதன் முத லாக ஆன்மிக பயணமாக நமிபியா, உகா ண்டா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.  
* 1968, ஜூலை 22: ஆந்திர மாநிலம், அனந் தபூரில் மகளிர் கல்லூரியை திறந்து வைத் தார்.
* 1968: மும்பையில் ஆன்மிகம் மற்றும் சமுக சேவைக்காக தர்மஷேத்ரா அல்லது சத்யம் மந்திர் ஒன்றை நிறுவினார்.
* 1972: ஆன்மிக மற்றும் சமுக பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்ட்டை நிறுவினார். 
* 1973: ஐதராபாத்தில் சிவம் மந்திர் நிறுவி னார்.
* 1981, நவம்பர் 22: புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
* 1981: சென்னையில் சுந்தரம் மந்திர் நிறுவ ப்பட்டது.
* 1993, ஜூன் 6: பாபாவின் படுக்கை அறைக் குள் திடீரென மர்ம நபர்கள் நுழைந்து அவரை தாக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கும், ஆசிரமத்தின் தொண்டர் களுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆசிரம தொண்டர்கள் 2 பேரும் பலியானார்கள். 
* 1995, மார்ச்: ஆந்திர மாநிலத்தில் வறண்ட பிரதேசமாக ராயலசீமா பகு தியில் சுமார் 12 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் மெகா குடிநீர் திட்ட த்தை நிறைவேற்றினார்.
* 1999: மதுரையில் ஆனந்த நிலை யம் மந்திர் நிறுவினார்.
* 2001: ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு வசதி யாக பெங்களூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனையை நிறுவி னார்.
* 2005: உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடி, அருளாசி வழங்கத் தொடங்கினார்.
* 2006: இரும்பு நாற்காலி ஒன்று விழுந்ததில் சாய்பாபாவின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது.
* 2011, மார்ச் 28: மூச்சு திணறல் காரணமாக, புட்டபர்த்தியில் உள்ள நவீன மருத்துவ மனையில் சத்ய சாய்பாபா சேர்க்கப்பட்டார்.
* 2011, ஏப்ரல் 24: ஞாயிற் றுக்கிழமை காலை 6.25 மணியளவில் சத்ய சாய் பாபா காலமானார்.
மறுபிறவி எடுப்பேன்
கடந்த 1940, மே 23ம் தேதி தனது 14வது வயதில், ‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் அவதாரம்‘ என்று கூறினார் சத்ய சாய்பாபா. அன்று முதலே சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார். பின்னர் கடந்த 1963ம் ஆண்டு சாய்பாபாவுக்கு பக்கவாதமும், மாரடைப்பும் ஏற்பட்டது. அவற்றில் இருந்து குணமடைந்த பாபா, ‘கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் பரத்வாஜா கோத்ரத்தில் பிரேம சத்ய சாய்பாபாவாக எனது அடுத்த பிறவி இருக்கும்’ என்று அறிவித்தார். அதனால், பாபாவின் அடுத்த பிறவி நிச்சயம் இருக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
அன்பால் கவர்ந்தவர்
லட்சக்கணக்கான பக்தர்களை அன்பால் கவர்ந்த சாய் பாபாவை, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என்று அவரை சந்தித் தவர்கள் ஏராளம். அவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ரூ.  1.5 லட்சம் கோடி சொத்து நிர்வகிக்கப் போவது யார்?
சாய்பாபாவின் ரூ. 1.5 லட்சம் கோடி சொத்துகளை யார் நிர்வகிப்பார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. புட்டபர்த்தியில் கடந்த 1972ம் சத்ய சாய் மைய அறக்கட்டளை தொடங்கப்பட்டது. சத்ய சாய்பாபாவின் எல்லா சொத்துக்களும் அந்த அறக்க ட்டளைக்குதான் சொந்தம். இந்த அறக்கட்டளை கல்வி நிறுவ னங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கிறது. 
அறக்கட்டளைக்கு உலகெங்கும் 166 நாடுகளில் உள்ள 3 கோடியே 70 லட்சம் பக்தர்களிடம் இருந்து நன்கொடை வருகிறது. நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடிக்கு நன்கொடை குவிந்தபடி உள்ளது. அறக்கட்டளைக்கு புட்டபர்த்தி, ஐதராபாத், சென்னை, பெங்களூர், கொடைக்கானல் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் சொத்து இருக்கிறது.  அந்த அறக்கட்டளையின் சொத்துகளின் தற்போதைய மதிப்பு ரூ. 1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 
சாய்பாபா காலமானதை தொடர்ந்து, அறக்கட்டளையின் தலை வர் பதவி யாருக்கு என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. நான்தான் பாபாவின் வாரிசு என்று அறக்கட்டளை உறுப்பி னர்களும், சாய்பாபாவுக்கு பணிவிடைகள் செய்து வந்த சிலரும், அவரது உறவினர்களும் கூறிவருகின்றனர். 
அறக்கட்டளை தலைவர் பதவிக்கு பலரது பெயர் அடிபடுகிறது. அவர் களில் முக்கியமானவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி யான சக்ரவர்த்தி. இவர் கடந்த 1981ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியை ராஜினாமா செய்துவிட்டு, புட்டபர்த்தி வந்தார். தற்போது, அறக்கட்டளையின் செயலாளராக இருக்கிறார். அறக்கட்ட ளையின் அடுத்த தலைவர் இவர்தான் என்று அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள், நிர்வாகிகள் தரப்பில் ஆதரவு உள்ளது. ஆனால், பக்தர்களிடையே எதிர்ப்பு உள்ளது. பாபாவை அவரது குடும்ப த்திடம் இருந்தும், பக்தர்களிடமும் இருந்து பிரித்து தனிமைப்ப டுத்தியவர் சக்ரவர்த்தி என்பது பக்தர்களின் குற்றச்சாட்டு. 
அடுத்தவர், சாய்பாபாவின் தம்பி ஜானகிராமின் மகன் ரத்னாகர். அறக்கட்டளையின் முழு நிர்வாகமும் ஜானகிராம் கையில் இருந்தது. கடந்த 2005ல் அவர் இறந்ததை தொடர்ந்துதான் மற்ற வர்கள் கை ஓங்கியது. இப்போது, அவரது மகன் ரத்னாகர், பெரி யப்பாவின் அறக்கட்டளை தலைமை பொறுப்பை ஏற்ற முயற்சி க்கிறார். ஆனால், இவருக்கு அறக்கட்டளை உறுப்பினர்களின் ஆத ரவு இல்லை.  மூன்றாவது நபர் சத்தியஜித். 
33 வயதான இவர் 5 வயது முதல் சாய்பாபாவின் கல்வி நிலையங்களில் படித்து எம்.பி.ஏ வரை பட்டம் பெற்றவர். கடந்த 2002ம் ஆண்டு முதல் பாபாவின் தனி உதவியாளராக இருக் கிறார். இவரது அனுமதி இல்லாமல் யாரும் சாய்பாபாவின் அறைக்குள் நுழைய முடியாது. இதுதவிர, சாய்பாபாவின் உறவி னர்கள் பலரும் அறக்கட்டளையின் தலைமை பொறுப்பை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 
அதே நேரத்தில், அறக்கட்டளையின் நிர்வாகப் பொறுப்பை ஆந் திர அரசு அதிரடியாக ஏற்றுக் கொள்ளும் என்ற தகவலும் வெளி யாகி உள்ளது. ஆனால், அதை ஆந்திர அரசு இப்போதைக்கு மறுத்துள்ளது. 
அறக்கட்டளை பொறுப்பாளர்கள்
அறக்கட்டளையின் தலைவராக சத்ய சாய்பாபா இருந்தார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, தொழிலதிபர்கள் இந்துலால் ஷா, வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி.கிரி, சாய்பாபாவின் தம்பி மகன் ரத்னாகர் ஆகியோர் தற்போது அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
சென்னை குடிநீருக்கு ரூ. 200 கோடி தந்தவர்
ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் தெலுங்கு கங்கை திட்டம். இந்த திட்டத்தில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய் கட்டுவதற்கு ரூ.200 கோடி நிதியுதவி செய்தவர் சத்ய சாய்பாபா. இதற்காக பாபாவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட கூட்டம் 2007 ஜனவரியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி உட்பட 4 முதல்வர்கள் பங்கேற்றனர்.
இலவச கல்வி வழங்க 33 நாடுகளில் பள்ளிகள்
இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் பள்ளிகள் தொடங்கி, சிறுவர்களின் கல்வியை மேம்படுத்தியவர் சாய்பாபா. ஆந்திரா பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீசத்யசாய் பல்கலைக்கழகம், நாட்டிலேயே ஏ பிளஸ் பிளஸ் ரேட்டிங் பெற்ற முதல் கல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, மெக்சிகோ, இங்கிலாந்து, பெரு, ஜாம்பியா உட்பட 33 நாடுகளில் பள்ளிகள் தொடங்கி இலவச கல்விக்கு வித்திட்டவர் சாய்பாபா. 
உலகம் முழுவதும் 1300 சேவை மையம் 
பிரசாந்தி நிலையம், சத்யசாய் பல்கலைக்கழகம், 220 படுக்கைகள் கொண்ட நவீன சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹை யர் மெடிக்கல் சயின்சஸ், சத்யஜோதி என்ற உலக அளவிலான ஆன்மிக மியூசியம், அருங்காட்சியகம், ரயில் நிலையம், விளை யாட்டு மைதானம், இசை கல்லூரி, விமான நிலையம், உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட ரூ.40 ஆயிரம் கோடி சொ த்துகளுடன் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளையும் இந்த டிர ஸ்ட் நிர்வகித்து வருகிறது. உலகம் முழுவதும் 1,300 சாய் மையங்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கலாசார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
பாபா மறையவில்லை பக்தர்கள் உருக்கம்!
லட்சக்கணக்கான பக்தர்களை சாய்பாபா பெற்றிருந்தாலும், காற்றில் இருந்து விபூதி, லிங்கம் எடுப்பது போன்ற இவரது சித்து விளையாட்டுகள் குறித்து அவ்வப்போது விமர்சனமும் வந்தது. 1976ல் பெங்களூர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த நரசிம்மய்யா, பாபாவின் சித்து விளையாட்டுகளை பரிசோதிக்க ஒரு கமிட்டி அமைத்தார். அக்கமிட்டி முன்னர் பாபா அற்புதங்கள் நிகழ்த்தி அவரது சக்தியை நிரூபிக்க வேண்டுமென்று பாபாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். 
பாபாவின் ஆத்ம சக்தியை தெரிந்துகொள்ள, பாபாவின் பாதை க்கு நீங்களும் வரவேண்டும் என்று அவருக்கு பாபா பதில் கடிதம் எழுதினார். பிற்காலத்தில் நரசிம்மய்யா அமைத்திருந்த கமிட்டி உறுப்பினர்களே பாபாவின் தீவிர பக்தர்களானது வரலாறு.
போதனைகள்: ‘புதிய மதத்தை நிறுவவோ, போதிக்கவோ நான் முயற்சி செய்யவில்லை. 
பாபா எல்லா மதத்தினரும் அவரவர்களின் மத கோட்பாட்டை முழுமையாக பின்பற்ற வேண்டும். எல்லா மனித உறவுகளும் சத்யம், தர்மம், பிரேமை, சாந்தி, அகிம்சை அடிப்படையில் இயங்க வேண்டும். தனிநபரின் தெய்வீக தன்மையை உணர உதவ வேண்டும்’ என்று போதித்தார். பாபாவின் இந்த பேச்சே சாதி, மதங்களை கடந்து லட்சக்கணக்கான மக்கள் அவரை நேசித்தனர். அவரது கொள்கை, பேச்சு ஆகியவை சத்யசாயி அருளுரைகள் என்ற தலைப்பில் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சனாதன சாரதி என்ற மாத பத்திரிகை 25 மொழிகளில் வெளியாகி உலகம் எங்கும் உள்ள சமிதிகளில் விநியோகிக்கப்படுகிறது. 
ஒரு முறை 96 வயது வரை வாழ்வேன் என்று பாபா கூறியி ருந்தார். அதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதிலும் பக்தர்கள் அவரை மீண்டும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர் உடல்நலம் பெற பிரார்த்தனைகள் செய்து வந்தனர். ஆனால், நேற்று காலை அவர் விடைபெற்றார். எனினும், பாபா இன்னும் மறையவில்லை என்றே ஏராளமான பக்தர்கள் உருக்கமாக கூறுகின்றனர்
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: