Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூட இந்த . . .

 காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். 
நிறைய பேருக்கு இதில் பெரும் குழப் பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து.
 இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட் டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடி யாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வய தில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இது வும் ஒன்று.

சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்ப த்தை விட முடியாமல் நீண்ட கால த்திற்கு நீடிக் கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்க ளுக்கு எதிர்கால செக்ஸ் வாழ் க்கை எப்படி ஆகுமோ என்ற கவலை ஏற்படுவது இயற் கை. இதுகுறித்து டாக்டர்கள் சொல்வது என்ன…?

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப் பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறை யப்பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கை யில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற் கை யாகப் போக வேண்டிய உணர் வுகளை, செயற்கையாக நாம் வெளி யேற்றுகிறோம், அவ்வளவு தான். இதனால் நமது செக்ஸ் உணர் வுகளோ அல்லது செக்ஸ் உறவின் போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடி யாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்க ளின் படங்களைப் பார்த்தால் உட னே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். 

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமை யானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொ டருபவர்கள் நிறையப் பேர் உள் ளனர்.

இதனால் செக்ஸ் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுமோ என்ற பயம் மட்டும் நிச்சயம் தேவையில்லை. எதுவும் தலைக்கு மேல் போய் விடாது. உங்களது மனதை ஒரு நிலைப் படுத்த முயற்சித்தால் நீங்கள் சுய இன்பத்திலிருந்து விடுபட முடியும். மனக் கட்டுப்பாட்டுக்கு நல்ல பயிற்சி எடுங்கள். சுய இன்பத்தை தடா லடியாக நிறுத்தி விட முயற்சிக்காதீர் கள். படிப் படியாக குறையுங்கள்.

அதுபோன்ற சமயத்தில், வேறு பக்கம் கவன த்தை திருப்ப முயற் சியுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் செய்து விடுங் கள்.

நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல விஷயங்களை அறிய முயற்சிப்பது, தேடுதல் நோக்கத்தை வேறு பக்கம் திருப்புவது, யோகாசனம், ஆரோ க்கியமான செயல் பாடுகளில் கவனத்தைத் திருப்புதல் என சுய இன்பத்திலிருந்து மீள நிறைய வழிகள் உள்ளன. 

தேவைப்பட்டால் ஒரு மன நல ஆலோ சகரை அணுகி ஆ லோசனை கேட்க லாம். அவர் கள் உங்களுக்கு நிச்சயம் உத வுவா ர்கள்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சி னைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த் தாலோ அல்லது அது போன்ற வற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறிவிடும். அப்ப டிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்ச ல்ட் செய்யலாம்.

ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்க ளுக்கும் கூட இந்த சுய இன்பச் சிக் கல் ஏற்படுவது சகஜமானதுதான். இரு பாலினரும் இதை உரிய முறையில் அணுகினால் எந்தத் தொந்தரவும், மனப்பு ழுக்கமும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் இது பெரிய பிரச்சினையே அல்ல, மாறாக உங் களது நம்பிக்கைக்கு விடப்படும் சவால், அவ்வளவுதான். அதை நீங்கள் வென்றால் சுய இன்பத்திற்கு வேலையே இல்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

7 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: