Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இமெயில் தொடக்க வரிகள் – ஏன், என்ன?

ஒருவர் இமெயில் பெறுகையில் அதன் தொடக்கத்தில்From, To, Subject தவிர இன்னும் நி றைய வரிகளில் சில தகவ ல்கள் தரப்படுகின் றன. இவை எல்லாம் என்ன? ஏன் இவை தரப்படுகின் றன? இவை குறித்த சில குறிப்புகள் இங்கு தரப்படு கின்றன.

முதலில் அனைத்து இமெ யில் கிளையண்ட் புரோகிராம்களும், இதுபோல அனைத்து தக வல்களையும் காட்டுவதில்லை என்பதை நினைவில் கொள் ளவும்.  இருந்தாலும் என்ன வெல்லாம் இருக்கலாம் என்று ஒரு எடுத்துக் காட்டினைப் பார்க்கலாம்.
ReturnPath:
Received: from sundaram (dinamalargw.customer.net [64.246.98.197])
(authenticated)
by dinamalar.in (8.11.6/8.11.6) with ESMTP id 35TKe7Z16838
for <murthy@dinamalar.in>; Mon, 24 Nov 2008 15:40:06 0500
MessageID: <008201c743e5$a66754 b0$6401a8c0@murthy>
From: “I” <murthy@dinamalar.in>
To: “B” <sundaram@dinamlar.in>
Subject: Computer Malar readers questions
Date: Mon, 24 Nov 2008 15:40:01 0500
XPriority: 3
XMailer: Microsoft Outlook Express 6.00.2900.3028
XAntivirusStatus: Clean
XUIDL: [Hb”!d”S”!T_<!!ZZ[!!
XAntivirus: AVG for Email 7.5.432 [268.17.14/657]
MimeVersion: 1.0
இவற்றை ஹெடர்க ள் என அழைக்கி றோம். சப்ஜெக்ட் லைன் தானே வே ண்டும்; இவை எல் லாம் என்ன? என்ற சந்தேகம் வரலா ம். ஏனென்றால் இமெ யிலைப் பொறுத்தவரை இன் பாக்ஸில் நாம் முதலில் பார்ப்பது சப்ஜெக்ட் லைனும் அதில் தரப்பட்டுள்ளவை யும் தான். இந்த ஹெடர்கள் எல்லாம் நாம் இமெயிலைத் திறக்கையில் நமக்குக் கிடைப் பவை ஆகும். பொதுவாக இந்த ஹெடர்கள் பல வரிகளில் இருப் பவை. இவற்றில் பலவகையான தகவ ல்கள் உள்ளன. மெயில் அனுப்பி யவர், பெறுபவர், அனுப் பிய சர்வர், கால நேரம், வைரஸ் உள்ளதா இல்லை யா எனப் பல தக வல்கள் தரப்படுகின்றன.

மேலே தரப்பட்டுள்ளவ ற்றைப் பார்த்தால் சற்று தலை சுற்றும். ஆனால் தகவல்கள் அப் படிப்பட்டவை அல்ல. நமக்குத் தேவை யானவை தான். முதல் வரியிலிருந்து வருவோம்.

ReturnPath வரியைக் காண்போம். இமெயில் ஒன்று தன் பாதை யில் செல்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இதிலு ள்ள இமெயில் முகவரி தான் மீண்டும் அதனை அனுப்ப வழி காட் டுகிறது. அடுத்ததாக Received என்று தொடங்கும் வரி. இது தான் பெறுபவரின் இன்பாக்ஸ் முகவரி. இமெயில் ஒன்று பல மெயில் சர்வர்களின் வழியே தன் பயணத்தை மேற்கொள்கிறது. அப்போது இந்த மெயில் இன் னாரிடமிருந்து இதில் குறிப் பிடப்படும் முக வரிக்குத் தான் செல்ல வேண்டும் என்பதனை அவற்றிற்கு அறி விக்கும் இட ம் இதுதான். வழக்கமாக இதில் சேர வேண்டிய சர்வரின் இருப் பிடம், ஐ.பி. முகவரி ஆகிய வை இருக்கும். இதில் இந்த இமெயில் அனுப்பப்பட்ட தேதியும் குறிப்பிடப் பட்டிரு க்கும். இதனால் ஒரு இமெயில் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந் தால் அது ஏன் செல்லவில்லை என்ற விசார ணையை இதி லிருந்து தொடங்கலாம்.

அடுத்த வரி MessageID ஆகு ம். இமெயில் பயணிக்கத் தொட ங்கிய முதல் சர்வரி லிருந்து அந்த இமெயிலுக்கு வழங்கப்பட்ட முதல் செயல் கட்டளை இதுதான். இதனை அடுத்து From: என யாரி டமிருந்து இது எனக் குறிப் பிடும் இடத்தைக் காணலாம். இதில் இமெயில் அனுப்பிய வரின் பெயர், முகவரி இருக் கும். அடுத்ததாக To: வரி. இதில் இந்த இமெயில் யாருக்கு என்ற தக வலும் அவரின் முகவரியும் இருக்கும். அடுத்ததாகக் காணப் படும் வரி Subject: வரி. இது இருக்கும். ஆனால் இதில் எதாவது எழுதப் பட்டிருக்கலாம்; அல்லது எழுதப்ப டாமலும் இருக்கலாம். அது இமெயிலை அனுப்புபவரின் விருப்பம். (ஒரு சிலர் சப்ஜெக்ட் லைனில் ஒன்றும் இல்லை என் றால் அதனைத் திறந்து படிக் காம லேயா அழித்துவிடும் பழக்கம் கொண்டிருப்பார் கள் – கோபத் துடன்) இதன் பின் இமெயில் எந்த நாளில் அனுப்பப்பட்டது என்ற தேதி உள்ள date வரி.

இவற்றை அடுத்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் தான் நம் மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இந்த வரிகளில் எக்ஸ் எனத் தொடங்கும் வரிகள் எல்லாம் பல்வேறு முக்கிய தகவல்களை அளிக்கும் வகையாக இடம் பெறுகின்றன.

இது இமெயிலுக்கு அதனை எழுதியவர் தந்த முன் னுரிமை இடத்தினைக் காட்டுகிறது. முக்கிய மான தா? அதிமுக்கியமா னதா? என இதில் தரப் படும். இவற்றைக் குறிக்க இங்கு எண்கள் தரப்பட்டி ருக்கும்.

அடுத்தது XMailer என்ற வரி. இது இந்த இமெயில் எந்த புரோகிராமில் இருந்து அனுப்பப்பட்டது எனக் காட்டும் வரியா கும். எடுத்துக் காட்டாக இங்கே காட்டப்பட்டுள்ளது அவுட்லுக் எக்ஸ் பிரஸ்.

அடுத்தது XAntivirusStatus என்பது. இது மெயிலில் ஏதேனும் வைரஸ் இணைந்துள்ளதா எனக் காட்டும் வரி. இதிலிருந்து அந்த இமெயிலில் ஏதேனும் வை ரஸ் இருந்ததா? அது நீக்கப்பட்டு உங்களுக்கு கிடை க்கிறதா? அல்லது அதனுடன் இருந்த அட்டா ச்டு பைலில் வைரஸ் இருந்து அட்டாச்மெண்ட் நீக்கப்பட்டு விட்டதா என்ற தகவல்கள் இங்கு காட்டப்படும்.

அடுத்து நாம் காண்பது XUIDL என்பது. இது இமெ யில்கள் பி.ஓ. பி.3 வகை சர்வர்களால் அளிக்கப் படுகையில் அதனை எடுத்துக் காட்டும் வகை யில் இதில் தகவல்கள் காட்டப்படும்.

அடுத்ததாக உள்ள XAntivirus என்னும் வரி இமெயிலை அனுப்பி யவர் என்ன ஆண்டி வை ரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறார் என் று காட்டும்.

மேலே சொல்லப்பட்டவை எல்லாம் எக்ஸ் தகவல்களைக் காட் டும் எக்ஸ் வரிகள். இமெயில் ஹெடர்களில் இறுதியாக Mime Version என்ற வரி கிடைக்கும். இது இமெயில் குறித்த ஒரு கான்டெக்ஸ்ட் தான். இமெயி லைப் பெறுபவர் புரிந்து கொள் வத ற்காகக் காட்டப்படும் தக வல். இதுவும் ஒரு எண்ணால் தான் பதியப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டில் இது 1.0 ஆக உள்ளதைப் பார்க்கலாம்.

சரி, இவை எல்லாம் எதற்காக? ஒரு சில வேளைகளில் இந்த ஹெடர்கள் நமக்குத் தேவைப்ப டுகின்றன. சில தகவல்களைப் பெற இவை துணை புரிகின்றன. இவற்றைப் பெற நாம் ஹெடர் களை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அவுட்லுக் எக்ஸ்பிர ஸ்ஸில் இதனைப் பெற மெசே ஜில் ரைட் கிளிக் செய்து கிடை க்கும் மெனுவில் Properties மீது கிளிக் செய்திடவும். இதில் பின் Details என்ற டேபினைத் தேர் ந்தெடுக்கவும். அனைத்து ஹெட ர்களும் காட்டப்பட்டு தகவல்கள் கிடைக்கும். மற்ற இமெயில் புரோகிராம்களிலும் இதனைப் பெறலாம். பெறும் வழிகள் சற்றே, சற்றேதான் மாறுபட்டிருக்கும். சில இமெயில் கிளையண்ட் புரோ கிராம்கள் இவற்றில் சிலவற்றை மட்டும் காட்டும் வகையில் செட் செய்திடும்படி இருக்கும். நம் விருப்பப்படி முழுமையாக வோ பாதியாகவோ ஹெடர்களைப் பெறலாம்.

எப்படி இருப்பினும் இவை குறித்து அறிந்து வைத்திருப்பது நல் லதுதான்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: