Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் விரல் நுனியில் வைரஸ்

உங்கள் மொபைல் போனில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போட்டி ருக்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பெரும் பாலா னவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். பலர், அப்படி எல்லாம் மொபைல் போனு க்கும் உள்ளதா என்று கேட்பார்கள். பெர்சனல் கம்ப் யூட்டர்கள், லேப்டாப் கம்ப் யூட்டர் கள் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் ஆண்ட்டி வைரஸ் புரோ கிராம் கொண்டு பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்கி வருகை யில், கம்ப்யூட்டரின் அனைத்து பணிகளையும் தற்போது இயக்கி வரும் மொபைல் போன் இந்த வகை பாதுகாப்பினைப் பெறாம லேயே உள்ளது.

இது குறித்து மெக் அபி நிறுவனத் துணைத் தலைவர் கூறுகையில், மொபைல் போன் வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே பரவவில்லை. முன்பு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் பரவத் தொடங்கியபோது ஏற்பட்ட வைரஸ் சூழ் நிலை, மொபைல் போன்களுக்குத் தற் போது ஏற்பட்டு வரு கிறது. இனி மக்கள் இதனை உணர்ந்து தற் காப்பு வழிகளை மேற் கொள்வார்கள் என்று கருத்து தெரிவித்து ள்ளார். முன்பு வைரஸ் அனுப்பும் ஹே க்கர்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற் றும் சர்வர்களை இலக்காகக் கொண்டு இயங்கினார்கள். இப்போது ஐ.பி. முக வரி பெறும் அனைத்து சாதனங் களை யும் இலக்காக வைத்துள்ளனர். மொ பைல் போன்கள் இன்டர்நெட் இணை ப்பில் ஒரு சாதனமாகப் பரவலாக இயங்குவதால், மொபைல் போன் களும் வைரஸ் பாதி ப்புக்குள்ளாகி வருகின்றன. ஐ.பி. முகவரி கொண்ட மொபைல் போன்கள், பன்னாட்டள வில் 600 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.

மொபைல் போன்களைத் தாக்கும் வைர ஸ்கள், போன்களில் பரவி, தகவல்களைத் திருடிப் பின்னர் அதிலிருந்து நீங்கி விடு கின்றன. வந்ததும் போனதும் பயன்படுத்துபவருக்குத் தெரி யாது. நாளொன்றுக்கு 60 ஆயிரம் வைரஸ்கள் இவ்வாறு இயங்கு வதாகத் தெரிகிறது.

இந்த வைரஸ்களுக்கு அடி த்தளம் பெரும்பாலும் டவு ண்லோட் செய் யப்படும் புரோகிராம்களைக் கொண்ட இணைய தளங்களாக உள் ளன. அடுத்ததாக, மொபைல் போனுக் கான சாப்ட்வேர் புரோகிராம் களில் உள்ள பலவீனமான குறியீடுகள் இவற்றிற்கு வழி வகுக்கின்றன. அண்மையில் ஆண்ட்ராய்ட் மார்க்கட் சர் வரிலிருந்து நிறைய அப்ளி கேஷன் புரோகிராம்கள் வைரஸ் இருந்ததால் நீக்கப்பட்ட செய்தியை நாம் பார்த்தோம். இதிலிருந்து மொபைல் போனுக்கான புரோகிராம் ஒன்று, ஆண்ட்ராய்ட் மார்க்கட், ஓவி ஸ்டோர், ஐபோன் மார்க்கட்டில் இருப்பதனா லேயே அது வைரஸ் இல்லாதது என்று தெரிகிறது.

சைமான்டெக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், மூன்று லட்சத்து 10 ஆயிரம் தனிப்பட்ட தள ங்கள், கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையனவாக உள்ள தாகக் கண்ட றிந்துள்ளது. சராசரியாக, ஒரு மாத காலத்தில், 44 லட்சம் கெடு தல் விளைவிக்கும் தளங்கள் அறியப்பட்டுள்ளன. இணைய தள ப்பக்கங்கள் அனைத்தும் நி லையா ன தகவல்களைத் தரும் பக்க ங்களாக அமைக் கப்படுவதால், இவற்றில் வைரஸ்கள் சென்று இணைந்து தங்கள் கெடுதல் வே லையை மேற்கொள்வது எளி தாகிறது.

இவற்றுடன் புளுஜாக்கிங் (Blue jacking) என்ற வகையில் தகவல் திரு டும் கெடுதல் வேலையும் மேற்கொள்ளப்படுகிறது. புளுடூத் தொழில் நுட்பம் மூலம் அந்த வசதியை இயக்கி வைத்திருக்கும் மொபைல் போன்களுக்கு வைரஸ்களை, அந்த போனைப் பயன்படுத்துபவர்களின் அனுமதி இன்றி கெடுதல் விளைவிக் கும் வைரஸை அனுப்புவதே, புளுஜாக்கிங் எனப்படுகிறது.

இதே போல Bluesnarfing என்று ஒரு முயற்சியும் மேற்கொள்ள ப்படுகிறது. இதன் மூலம் வைர ஸ்கள் புளுடூத் இணைப்பு மூலம் அனுப்பப்பட்டு, மொ பைல் போனில் உள்ள தக வல்கள் அனைத்தும் மொத் தமாகத் திருடப் படுகி ன்றன.
தற்போது பெருகி வரும் 3ஜி சேவை இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாய் அமைந்து வருகிறது. 200 குழுக்களைச் சேர்ந்த, 2,200 மால்வேர் புரோகிராம்கள், இந்த சேவையின் மூலம் பரவுகின்றன. குறிப்பாக, நெட்வொர்க்குகள் இடையே இணைப்பு ஏற்படுகையில், இவை எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப்பட்டு ள்ளது. ரோமிங் மேற்கொள்கையில், மொ பைல் போன்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அறிய ப் பட்டுள்ளது.

Zeus Trojan என்ற ஒரு வைரஸ், பிளாக் பெரி மொபைல் போன்களை எளிதாகக் கைப்பற்றும் வகையில் உருவாக்கப் பட்டு பரவ விடப்பட்டது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த வைரஸ் தன்னை உருவாக்கி அனுப்பிய ஹேக்கருக்கு, மொபைல் போன் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே எஸ்.எம்.எஸ். அனு ப்பும் திறன் கொண்டது. வரும் அழைப்புகளைத் தடை செய்திடும்; புதிய அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றினை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது.

பல வைரஸ் எதிர்ப்பு மற்றும் மொ பைல் பாதுகாப்பு புரோகிராம்கள் இணை யத்தில் கிடைக்கின்றன. இவ ற்றை இல வசமாக டவுண்லோட் செய்து இன் ஸ்டால் செய்து கொள் ளலாம். இந்த வகையில் ஒரு நல்ல சாப்ட்வேர் புரோகிராம், போன்களை கெடுதல் விளைவிக்கும் வைரஸ் களிடமிருந்து பாதுகாப்பது மட்டு மின்றி, மொபைல் போன் திருடப் பட்டு அல்லது காணாமல் போகும் வேளைகளில், அந்த போனை ரிமோட் மூலம் செயல் இழக்கச் செய்திடும் வசதியைத் தருகின்றன. இதே வழியில், மொபைல் போனில் உள்ள அனைத்து பெர்சனல் தகவல்களையும் அழிக் கவும் வழி தரப்படுகிறது.

சில குறிப்பிட்ட மொபைல் போன் வைரஸ் களை இங்கு பார்க்கலாம்.
1. Android/Geinimi: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இய ங்கும் போன்களில், வர்த்தக ரீதியான மொ பைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் போன்ற கேம்ஸ்களில் நுழைந்தே இந்த ட்ரோஜன் வைரஸ் வருகிறது.

2. SymOS/XMJTC: இது ஒரு குழுவான வைரஸ். புரோகிராம் டெவலப்பர்கள் நம்மிடம் அனுமதி பெறும் சான்றிதழ் போன்ற போர்வையில் போன்களுக் குள்ளே நுழைகின்றன. இவை எங்கு தகவல்களை அனுப்புகின்றன என்பதைக் கண்டறியும் வழிகளை அண்மையில் சில ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கண்டறிந்து ள்ளன.

3. Mobspy.A: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைக் குறி வைத்துப் பாதித்து, இயங்கும் வைரஸ். மொபைல் போனுக்கு வரும் மற்றும் அழைக்கும் எண்களைப் பதிவு செய்கிறது. எஸ்.எம்.எஸ். செய்தி களையும் குறித்து வைக்கிறது. போன் பயன்படுத்துபவர் வாழும் இடத்தையும் ஜி.பி.எஸ். மூலம் அறிகிறது. இவ்வாறு திருடப் பட்ட தகவல்கள் அனைத்தையும், சர்வர் ஒன்றுக்கு அனுப்புகிறது. இந்த திருட்டு தகவல்களை ஹேக்கர் எப்போது வேண்டு மானாலும், தன் நோக்கங் களுக்குப் பயன்படுத்த முடியும்.

4. CommWarrior: பெரும்பாலான நோக்கியா போன்களில் பயன் படுத்தப் படும் சிம்பியன் சிஸ்டத்தில் இந்த வைரஸ் பரவுகிறது. பரவிய போனில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு எம்.எம்.எஸ்.வகை செய்திகளை அனுப்புகிறது இந்த வைரஸ். அழைப்பு பதிவுகளையும், எஸ்.எம்.எஸ். செய்திகளையும் பதிவு செய்து, ஹேக்கருக்கு அனுப்புகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: