Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ.நா., விசாரணைக்குழு அதிர்ச்சி ரிப்போர்ட்: தமிழ்பெண்கள் கற்பழிப்பு – கைதிகள் சுட்டுக்கொலை

இலங்கையில் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் நடந்த ஒரு மாத காலத்தில் போ ராட் டத்திற்கு தொடர்பு இல் லாத 10 ஆயிரத் திற்கும் மேலான பொது மக்களை குண்டு போட்டு கொன் றுள்ளது என்றும், சிறை யில் அடை க்கப் பட்ட கை திகள் தலை யில் துப்பாக்கியால் சுட்டு கொன் றிருக்கின்றனர் என் றும் ஐ.நா., சபை விசார ணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறு திக் கட்டப் போர் நடந்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்த தாக எழுந்த புகாரை அடுத்து ஐ.நா., சபை ஒரு குழு அமைத்து விசாரித்தது. இந்த விசாரணையில் பெருமளவில் பிரயோகிக் கப்பட்ட ஆயுதங் களால் இலங்கை அரசு பல ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொலை செய்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அதே நேரத்தில் புலிகள் பொதுமக்களை , மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறது.

ஆஸ்பத்திரிகள், ஐநா மையங்கள் மற்றும் சர்வதேச உதவிக் குழுவான செஞ்சிலுவைச் சங்கத்திற்குச் சொந்தமான உதவிக் கப்பல் ஆகியவற்றின் மீது இலங்கை அரசுப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஏபி செய்தி நிறுவனத்தை ஆதாராமாக மேற்கோளிட்டு ஐநா காட்டி யுள்ளது. மனித உரிமை மீறல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரி கிறது. இலங்கையில் ஐ.நா., அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப் படவில்லை. இதில் இலங்கை அலட்சியமாக இருந் ததும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கைதிகளை சுட்டுக்கொன்ற கொடூரம்: சிறையில் அடைக்கப் பட்டிருந்த கைதிகள் அவர்களின் தலைகள்மீது சுட்டுக் கொல் லப்பட்டனர் என்றும் ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்ஈழ புலிகள் சுமார் 3, லட்சத்திற்கும் 30 மேற்பட்ட பொதுமக்களை மனிதக் கேடய மாகப் பயன்படுத்தினர் .

ஐநா சபை விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என இலங்கை கேட்டுக் கொண்டிருந்தது. இந்த அறிக்கை வெளியா னால் மறுசீரமைப்புப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்நாடு கூறியிருந்தது. இலங்கையின் இந்தக் கோரிக்கையை ஐநா ஏற்க மறுத்து விட்டது.

இந்த அறிக்கை தவறானது என்றும் முறைகேடானது என்றும் இலங்கை அரசு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

நாளிதழில் கண்டெடுத்த செய்தி
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: