எத்தனை முறை… எத்தனை பேர் எச்சரித்தாலும் சினிமா மோக த்தில் கற்பை பறிகொடுத்து கண்ணீர் வடிக் கும் பெண்களின் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. கட ந்த சில மாதங் களுக்கு முன் சினிமா மோக த்தால் சென் னைக்கு வந்த பள்ளி மாணவிகள், காமுகர் களி டம் சிக்கி சீரழிந்த சம்பவம் நடந்தேறி யது. அதற்குப் பிறகும் அது போன்ற சம்பவ ங்கள் தொடர்ந்து கொண்டிரு க்கின்றன என்பதற்கு உதாரணமாக லேட்டஸ்ட் சம் பவமொன்று நடந்திருக்கிறது. கன்னி யாகுமரியை சேர்ந்த 58 வயது ஆயுர்வேத டாக்டர் செல்வராஜ், என்
உள்ளம் உன்னைத் தேடுதே என்ற பெயரில் புதிய படமொ ன்றை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்தார். படத்தின் நாயகனாகவும் அவரே நடித்த இந்த படத்தில் கதா நாயகிகளாக சோனியா ஷெட்டி, மம்தா ஆகியோர் நடித்தனர். படத்தில் பல கிளுகிளு சமாச்சாரங் கள் இருந்ததால் சென்சார்போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது. ஆனால் படத் தை யாரும் வாங்க முன் வராத தால் ரீலிஸ் ஆகாமல் பெட்டிக்குள் முட ங்கிக் கிடக்கிறது.
ஒரு படம் எடுத்து, அதுவும் ரீலிஸ் ஆகா மல் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ருசி கண்ட பூனை போல தனது வேட் டையை தொடர்ந்திருக்கிறார் டாக்டர் செல்வராஜ். தனது மருத்துவ மனையில் பணிபுரியும் 3 நர்சுகள் மற்றும் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களிடம் தனது லீலைகளை செய்திருக்கிறார். சினிமா ஆசை காட்டியதால் அவரது சல்லாபம் வெளிச் சத்துக்கு வராம லேயே இருந்து ள்ளது. இந்நிலையில் தான் ஆயுர்வேத டாக்டரை ஆட்டம் காண வைக்கும் வகையில் சில நோயாளிகள் போலீசில் புகார் தெரி வித்துள்ளனர். இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள் ளார்.
செக்ஸ் டாக்டர் செல்வராஜ்-க்கு இர ண்டு மனைவிகள். இவருக்கு கன்னயாகுமரி மற்றும் சென்னை யில் மருத்துவமனைகள் உள்ளன. இரண்டு மனை விகளும் ஆளுக்கொரு மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்கள். இவர் நர்சிங் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளம் பெண் களிடம் அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது மருத்துவமனையில் சேர்ப்பது, பின்னர் தன்னை சினிமா தயாரிப் பாளராக அடையாளப்படுத்திக் கொண்டு நர்சிங் மாணவிகள், சிகிச் சைக்கு வந்த அழகான இளம்பெண்களை சீரழித்துள்ளார். அவருடன் நடித்த நடிகைகளிடம் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ள போலீ சார், சினிமா பிரமுகர்களுடனான டாக்ட ரின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.
சினிமா உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாமல்… நிழலைப் பார் த்து நிஜமென நம்பி எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும், பணம், புகழை சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண் களை என்ன வென்று சொல்வது? இவர்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை டாக்டர் செல்வராஜ் போன்று சினிமாவைக் காட்டி கற்பை சூறையாடும் காமுகர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.
நாளிதழில் கண்டெடுத்த செய்தி
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.