ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் “@” என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது?
மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உப யோகித்தது “ரே டாம்லின்ஸன்” (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப் யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக் குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக் கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், ” கீ போர்டில் அக்கரை யுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராத தும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்.” என்று சொன்னார்.இந்த @ சின்னம் கம்ப் யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நி னைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரம த்துடன் படிக்கும் பொழுது லத்தீன் மொழி வார்த்தை “ad”, “at” or “towards” or “By” என்று பல அர் த்தங்களைக் கொண் டிருப்பதைக் கண்ட னர்.
அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலை யை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதா வது உதாரணமாக 10 பென் சுக்கு 5 ஆப்பிள் (“5 apples @ 10 pence.” ). மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச் சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து “a”யை வேகமாக உச்சரிக்கும் பொ ழுது ஏற் பட்ட திரிபு என்கி றார்.
ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச் சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியா பார தஸ்தா வேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக்கண்டு பிடித் தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the “anfora,” or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என் றார்.
Giorgio Stabile 1492ஆம் வருட த்திய லத்தீன் – ஸ்பானிஷ் அகரா தியில் “anfora” என்பது “arroba” ( ஒரு நிறுவளளவை) என்று மொ ழி பெயர்க்க ப்பட்டுள்ளது என்ப தைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபர ரீதியான “a” (the “commercial a”) முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.
80 வருடங்களுக்குப் பிறகு அங்கிரு ந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேர க்டரில் (Such as ASCII) இடம் பெய ர்ந்துவிட்டது. (It’s therefore natural that, in 1885 the “commercial a” was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later. )
தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானி யர்கள் இதை “arroba” என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் “arobase.” என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் “at-sign.” என்றும், ஜெர்மா னியர் (“at-Zeichen”), என்றும், எஸ்தோனியர் (“ät-märk”) என்றும், ஜப்பா னியர் (“atto maak”). என்றும் உச்சரிக் கிறார்கள்.
ஆயினும், அதிகமான பாஷை களில், இந்த சின்னம், பல தரப் பட்ட உருவகம், பொதுப்படை யாக, பிராணி களுக்கு ஒப்பிட்ப்ப டுகிறது. ஜெர்மா னியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக் கர்கள், இந்தச் சின்னத் தைக் குரங்க்கின் வாலாகப் பார்க் கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.