மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணை ப்பு வள ரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷய மாகத் தொ டர்ந்து இருந்து வருகிறது. இருப்பி னும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம் பர் மாதத்திலிருந்து பார்க் கையில் வளர்ச்சி சற்று வேக மாக உள்ளது தெரிய வந்து ள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயி ரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்ச த்து 10 ஆயிரமாக வளர்ந் துள்ளது. மொபைல் பயன்படுத் துபவர் களின் எண் ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்க ளில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்
து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறு வனங்களில், பாரதி ஏர்டெ ல், ரிலையன்ஸ் மற்றும் வோட போன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப்பெற்று ள்ளன.
காம் ஸ்கோர் நிறுவனத்தின் கண க்குப்படி, ஒரு நேரத்தில் சராசரி யாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக் கின்றனர். இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணை யத்தில் பார்க்கி ன்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நே ரம் இணையத்தில் செல விடுகின்றனர். யு-ட்யூப் தள த்தில் பார்க் கப்படும் இணை ய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க் கப்படு கின்றன. 78 கோடி தடவை இவை காணப் படுகின்றன.
பேஸ்புக் சோஷியல் தளத் தில் 66 லட்சம் பேர் பதிந்து ள்ளனர். இவர்கள் 3 கோடி ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்து ள்ளனர்.
இந்த கணக்கினை வெளியி ட்ட காம் ஸ்கோர் நிறுவனம், இந்திய ரசிகர்கள் வீடியோ பார்ப்பது குறைவு தான் என்று அறிவித் துள்ளது. அமெ ரிக்கா, பிரேசில், பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரில் 80% பேர் பார்ப்பதாகத் தெரிவி த்துள் ளது.
பிராட்பேண்ட் இணைப்பினை அதிகம் வழங்க அரசு எடுக்கும் நடவடி க்கை களினாலும், 3ஜி சேவை வேகமாக வளர்ந்து வருவ தனாலும், வீடியோ பார்ப்பது இந்தியாவில் இன்னும் அதிகரிக்கும் என்று அனை வரும் நம்புகின்றனர்.
ஆய்வில் எடுத்த தகவல்களின் அடிப் படையில் பார்க்கையில், 2015 ஆம் ஆண்டில், இந்திய ஜனத் தொகை யில் 30% பேர் 3ஜி சே வையில் இணைக் கப்படுவார்கள் என்று எதிர்பா ர்க்கப்ப டுகிறது. 2011 ஆம் ஆண்டிலி ருந்து 2015 ஆண்டுக் குள்ளாக, 3ஜி சேவை மூன்று மடங்கு அதிகரிக்கும். இவற் றில் 80% 3ஜி இணைப்பு ஜி.எஸ். எம். வகை யாகவும், 20% சி.டி.எம்.ஏ. வகையி னதாகவும் இருக்கும். சி.டி. எம்.ஏ. வகை 3ஜி தொடர்புகளில் ரிலையன்ஸ் 39 சதவிகிதத்தினையும், டாட்ட டெலிசர்வீசஸ் 15% கொண்டிரு க்கும்.
மொத்த 3ஜி சேவையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 18%, ரிலை யன்ஸ் 15% கொண்டிருக்கும். பி.எஸ்.என்.எல். பங்கு 13% ஆக இருக்கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது