ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தைச் சேர்ந்தவை. இப்பற வைகள் அவற்றின் விலை மதிப்பு மிக்க இறை ச்சி, முட்டைகள், தோல், தோலி லிருந் து பெறப்படும் எண் ணெய் மற்றும் இறகுகள் போன்ற வற்றுக்காக வளர்க்க ப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்ப வெப்ப நிலை யையும் தாங்கி வளரக் கூடிய வை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப் பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.
ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட் இனத் தைச் சார்ந் தவை. இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழி கள் உலகத்தின் பல பகுதி களில் அவற்றின் இறை ச்சி, தோல், தோலிலிருந்து பெற ப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதி யாக வளர்க்கப் படுகின்றன. இப் பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. இப்பற வைகள் திறந்தவெளியிலும், தீவிர முறை யிலும் வளர்க்கப் படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு: ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய தலையையும், கால்களில் மூன்று விரல் களையும் கொண்டதாக இருக்கும். மூன்று மாத வயது வரை ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று காண ப்படும். ஆனால் இந்த கோடுகள் 4-12 மாத வயதில் மறைந்து, பழுப்பு நிறமாக மாறி விடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60 கிலோ உடல் எடை உடையன வாகவும் இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின் காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில் களுடனும் காணப்ப டுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின்
இயற்கையான உணவு பூச்சிகள், செடிக ளின் இலைகள், பழங்கள் மற்றும் காய் கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைக ளைவிட பெரியதாக இருக்கும். ஈமுக் கள் முப்பது வருடம் வரை வாழக் கூடியவை. ஈமுக்களை மந்தையாக வோ அல்லது ஆண், பெண் பறவை களாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்: ஈமு கோழிக்கறி குறை ந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் மேல் தோல் மென்மை யாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பான அமைப்பினைக் கொண்டிருப் பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப் படும் எண் ணெய் உணவுக் காகவும் மருந்தாகவும், அழகு சாதன பொருட் கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளா தாரம்: ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினைப் பற் றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில் 68% கோழிகளை வாங்குவதற்கும், 13% பண்ணையை அமைப்பதற்கும், 19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக் கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கருவுற்ற முட் டை யினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு ரூ.1232 செலவாகிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி ஈமு கோழி வருடத்திற்கு ஆகும் தீவனச்செலவு ரூ.3578. ஒரு நாள் வயதடைந்த ஈமு கோழிக்குஞ்சு ஒன்றின் விற் பனை விலை ரூ.2500 – 3000. எனவே, ஈமு கோழிப் பண்ணை யினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் தீவனச்செலவு குறைவா கவும் குஞ்சு பருவத்தில் இறப்ப சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, 268/77, ஓல்ட் ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபுரம்-638 657.
-ஆர்.ஜி.ரீஹானா, எம்.எஸ்சி., எம்.பில்., அக்ரி கிளினிக்,8903757427.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
வணக்கம்
என் பெயர் பிரதீஷ் நான் இரண்டு வருடங்களாக ஈமு வளர்ர்த்து வருகின்றேன் முட்டைகளை அடைகாப்பான் மூலம் குஞ்சு பொறித்து குஞ்சுகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டேன்,ஈமு பண்ணை அமைக்க ஆசைப்படுவோர் யாரிடமும் ஏமாராமல் நீங்கள் செலுத்தும் 1,50,000 ரூபாய்க்கு 3 ஜோடி பெரிய ஈமு பறவை மற்றும் 1 வருட தீவனம் அதுமட்டுமல்லாமல் மாதம் ரூ 6000 1வருடம் பெற்று தருகிறோம் மற்ற நிறுவனங்களில் 3 மாத பறவைகளைதான் தருகிறார்கள் நன்றி
தொடர்பிற்கு
இரா.பிரதீஷ் குமார்
+91-9597888085
+91-9487952243