Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எக்ஸெல் டிப்ஸ்

மூன்றுக்கும் மேலான ஒர்க் ஷீட்கள்
எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றைத் திறந்து டேட்டாக்களை உள்ளிடுகையில், நமக்கு தொடக்க நிலையில், மூன்று ஒர்க் ஷீட்கள் கிடைக்கும். இது மாறா நிலையில் (Default) உள்ளபடி தரப் படுகிறது. சில வேளைகளில், நாம் ஒரே நேரத்தில், மூன்றுக்கும் மேற்ப ட்ட ஒர்க்ஷீட்களில் டேட்டா உள்ளிட வேண்டியதிருக்கும். எடுத்துக் காட் டாக, பல வகுப்புகளில் உள்ள மாண வர்களுக் கான டேட்டாவினை இடு கையில், அந்த வகுப்பில் உள்ள செக்ஷன்களுக் கேற்றபடி, பல ஒர்க் ஷீட்களில் டேட்டாவினை, ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இட வேண்டியதிருக்கும். இதற்காக, நாம் மெனு சென்று இன் ஸர்ட் (Insert) கட்டளையைப் பயன் படுத்த வேண்டியதி ருக்கும். இதற்குப் பதிலாக, ஒர்க்புக் திறக்கையிலேயே நாம் விரு ம்பிய எண்ணிக்கையில் ஒர்க்ஷீ ட்கள் கிடைத்தால், நன்றாக இருக் குமே என்று நாம் எண்ணலாம். இதற்கேற்ற வழியை எக்ஸெல் தருகிறது.

முதலில் Tools மெனு செல்லவும். அதில் Options பிரிவில் கிளிக் செய் திடவும். பின் கிடைக்கும் (Options Dialogue Box) டயலாக் பாக்ஸில் General என்னும் டேபினைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும். இதில் இரண்டாவது பிரிவில் முதலாவதாக Sheets in New Workbook என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் 3 என்ற எண் இருக்கும். இதன் மீது கர்சரைக் கொண்டு சென்று உங்களுக்குத் தேவையான ஒர்க் ஷீட் எண்ணிக்கை எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்திட லாம். அல்லது அருகே உள்ள சிறிய அம்புக் குறி களை மேல் கீழாக அழு த்தி எண்ணி க்கையை அதிகப் படுத்த லாம்; அல்லது குறை க்கலாம். செய்து முடித் தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை ஒர்க் ஷீட் வேண்டு மென்று செட் செய்தீர்களோ அத்தனை ஒர்க் ஷீட்க ளுடன் புதிய ஒர்க் புக் திறக்கப்படும். நினைவில் வைத்துக் கொள் ளுங்கள், புதிய ஒர்க் புக் தான் இந்த மாற்றங்களோடு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வைத்திருக்கும் ஒர்க் புக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப் படாது.

அனைத்து பக்கங்களிலும் தலைப்புகள்:
எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றைத் தொடங் குகையில், முதல் படுக்கை வரிசைகளில், செல்களில் டேட்டா உள்ளீடு செய்திட வசதியாக, டேட்டா சார்ந்த பொருள் குறித்த தலைப் பினை எழுதி வைப்போ ம். இதனா ல், தவறு ஏற்படாமல் டேட்டாக்களை இடலாம். எடுத்துக்காட்டாக, பொருட் களை விற்பனை செய்திடும் கடை ஒன்றில், பொருட்கள் விற்பனை ஏற்படுகையில், ஒவ்வொரு பில்லுக் குமான தொகையினை அந்த அந்த பொருளுக்கேற்ப உள்ளீடு செய்திட விரும்புவோம். இதற்கு தலைப்பில் அந்த பொருளின் பெயர் தலைப்பாக இருந்தால், சரியாக டேட்டா அமைக்கலாம்.

ஆனால், இரண்டாவது பக்கத்திற்குச் சென்றவுடன், இந்த தலை ப்பு தெரியாது. நம்மால் ஓரளவிற் குத்தான் பொருட்களின் பெய ர்களை நினைவில் வைத்திருப் போம். இத ற்கான தீர்வு, ஒவ் வொரு பக்கத்திலும் செல்களின் தலைப்புகள் காட்டப்பட வேண்டும். அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங் களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்த படி இருக்க வேண்டும். இதனை அமைத்திட சில செட்டிங்ஸ் மாற்றம் மேற்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, முதல் மூன்று படுக்கை வரிசைகளில் நிறுவனப் பெயர் மற்றும் நெட்டு வரி சைகளில் அமைப்பதற்கான டேட் டாவினை விளக்கும் வகை யில் தலைப்புகளை அமைத் திருக்கி றீர்கள். இந்த மூன்று படுக்கை வரிசைகளும் அனைத்து பக்கங் களிலும் தெரிய வேண்டும். எனவே A4 செல்லைத் தேர்ந் தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்னர், மேலே உள்ள மெனு பாரில், Window என்பதில் கிளிக் செய்திடுங்கள். கீழாக Freeze Panes என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போ து மூன் றாவது படுக்கை வரிசைக்கும், நான்காவது படுக்கை வரிசை க்கும் இடையே, பட்டையாக ஒரு கோடு இருக்கும். இனி நீங்கள் 60, 70 என எந்த படுக்கை வரிசைக்குச் சென்றாலும், முதல் மூன்று படுக்கை வரிசைகள் அப்படியே மேலாக உறைந்து நிற்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதற் கெனத் தேர்ந்தெடுக்கும் செல் அ வரிசையில் தான் இருக்க வேண்டும்.

சரி, வேலை முடிந்த பின், இந்த உறைந்த செல்களை மறுபடியும் வழக்கமான நிலையில் வைக்க வேண்டுமே. என்ன செய்யலாம்? மீண்டும் Window மெனுவி னைத் தேர்ந்தெடுத்தால் அங்கு Unfreeze Panes என்று ஒரு பிரிவு Freeze Panes இருந்த இடத்தில் இருக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே உறையச் செய்த வரிசைகள் அதன் தன்மையிலிருந்து விலகும். குறுக்காக இருந்த பட்டையான கோடு மறைந்துவிடும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: