Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை :

கல்விக்கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மா ணவர் களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழி முறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி யின் தலைமை மே லாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கி னார்.

தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம்., பல்கலை யுடன் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக, வழிகாட்டி எனும் உயர் கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சியை, சென்னை ராயப் பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்தி யது. இந்நிகழ்ச் சியின் கடைசி நாளான நேற்று, 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆர்வ முடன் பங்கேற்றனர்.

“அது சரி…! படிக்க நிறைய செலவு ஆகுமே என்ற கவலையா?” எனும் தலைப்பில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் பேசியதாவது: மாணவர் களுக்கு பணம் இல்லை என்ப தால், கல்வி தடை படக் கூடாது என்ற நோக்கில், முழு முனைப்புடன் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் கல்விக் கடன் திட்டம். நாட்டில் 25 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இவற்றில், பி.ஏ., பி. எஸ்சி., பி.காம்., மெடிக்கல், இன்ஜி., உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும் வங்கிகள் கல்வி கடன்களை வழங் குகின் றன. பொதுத் துறை வங்கிக ளிடம், சிறப்பு படிப்புகளுக்கு மட் டும் கல்விக் கடனை பெற முடியாது.

கல்விக் கடன் பெற இந்த படத்தை கிளிக் செய்க‌

கல்விக் கடனை பெற விரு ம்பும் மாணவர்கள், வங்கி பணி கள் அதிகம் இருக்கும் நாட்களைத் தவிர்த்து அணு கினால், கல்விக் கடன் பெறு வதில் இரு க்கும் நடைமுறைகள் மற் றும் வழங்க வேண்டிய ஆவ ணங்கள் என, அனைத்து விவரங்க ளையும் எளிதில் அறிந்து, கடனை பெற உதவியாக இருக்கும். கல்விக் கடன் பெற்று படிக்கும் மாண வர்களுக்கு கடின உழை ப்பு அவசியம் இருக்க வேண்டும். தன்னம் பிக்கை இல்லாமல் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை மாணவ ர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு விருத்தாசலம் பேசி னார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: