Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாரடைப்பு, திடீர் மரணம் குளிர் பிரதேசங்களில் ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதி கமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவ ண ங்கள் மூலம் அறிய லாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண் டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட் டில், பெரும்பாலான மாதங்கள் வெயி ல் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்க ளின் உடல்நிலை, அதற் கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இரு தயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது. எந்த வகையான மாற்றம்?

* குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வை க்  கிறது. இதனால், இதயம், அள வுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந் தத்திற்கு ஆளாகிறது.

* குளிர் பிரதேசம் மற்றும் மலை பிர தேசங்களில், பிராண வாயு குறை வாக இருக் கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட் டை அணுக்கள், பைபர்நோஜன் அதிகரிக் கிறது. கூடவே கொலஸ் ட்ராலும் அதி கரிக்கிறது. இத னால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறை ந்து, இதயம், மூளை ஆகிய வற்றுக்குச் செல்லும் ரத்தம் குறை கிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடுவயதினருக்கும், பக்க வாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.

* அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற் படும் வாய்ப்பு, 50 சதவீதம் அதிக ரிக்கிறது. இதே நிலை தான், நம் நாட்டில் மலை பிரதே சங்களில் வாழ்பவர் களுக்கும் ஏற்படும். மார்பில் அழுத்தம் ஏற்படுவது தான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர் த்தி அதிக ரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ் ட்ரால் அதிகம் உள்ள வர்களின் நிலை, இது போன்ற காலங் களில், மிகவும் பரிதாபம். தாறு மாறான இதயத் துடிப் புள்ள நோயாளிகள், “டீபிப்ரிலேட்டர்’ என்ற கருவியை பொருத்திக் கொள்வது வழக்கம். இது, “பேஸ் மேக்கரை’ப் போலத் தான் என்றா லும், “பேஸ் மேக் கர்’ குறைந்து போகும் இத யத் துடிப்பை சீர் செய் யும். “டீபிப்ரிலேட்டர்’ கருவி, அதிகரித்துப் போகும் இத யத் துடிப்பை சீர்செய்யும். இது போன்ற கருவி வைத் தி ருப்பவர்களும், மலைப் பிர தேசங்களுக்குச் செல் லும் போது, கவன மாக இருக்க வேண்டும்.

ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பா ரன் ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இறங்கி விட் டால், உடல் நடுக்கம் ஏற் பட்டு, நிலை தடு மாறும். இத யம் செயலிழப்பு, மார டைப்பு, மயக்க நிலை மர ணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண் டும். தலைக்கு குல்லா, கை,  கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணி வது ஆகிய வற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர் களும், மலைப்பிரதேசத்திற்குச் செல் லும் போது, கவனமாக இரு க்க வேண் டும். மது அருந்தி விட்டு, நடை பயிற்சி மேற்கொள் வதோ, உலவப் போவ தோ கூடாது. ஏனெனில், மது அருந்தி யவு டன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும். பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும். சம வெளிகளில் கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற் படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்ட த்தை தடுக் கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, பட படப்பு ஏற் படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறு மாறான இதயத் துடிப்பு ஆகி யவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொல ஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ள வர்கள், எப்போதும் கைப் பையில், “சார்பிட்ரேட்’ மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத் திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், “ஏசி’ அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொ டர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப் பதும் தவறு. அவ்வப்போது, அறை யின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், “ஏசி’ யை அ ணைத்து வைக்க வேண்டும். இங் கிலா ந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வரு கிறது. அவர் களில் 86 ஆயிரம் பேர் இறக் கின்றனர். அமெரிக்கா வில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற கால ங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால் களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

டாக்டர். சு.அர்த்தநாரி
சென்னை. 98401 60433.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply