உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ், மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில், அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிக ளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரை ட்டிங், கம்ப் யூட்டர் வருகையால் கணி சமாக குறை ந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டு களுக்கு முன் பே, தட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக, டைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண் டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து, கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை யடுத்து, டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்ப ட்டன. ஆனாலும், கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம்,
டைப்ரை ட்டிங் மிசின்களை தயாரித்து வந் தது. உலகின் கடைசி டைப்ரைட் டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறு வனம், அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இது குறித்து, இதன் உயர் அதிகாரி மிலிந்த்துக்லே கூறியதாவது, கம்ப் யூட்டரின் பயன் பாடு அதிகரித்து விட்டதால், இதன் பயன்பாடு குறை ந்து விட்டது. பயன் பாடு குறைந் ததால், தங்களுக்கு வரும் ஆர்டர் களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போது, தங்க ளிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப் ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும், இதனையடுத்து வேற வழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவி த்தார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.