Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்வெர்ட்டரை எப்படி பயன்படுத்தினால் லாபம் ?

மின் தடை ஏற்படும் நேரங்களில் மட்டுமே இன்வெர்ட்டரை பயன்படுத்து வதால், அந்நேரத்தின் அத்தியாவசியத் தேவைகளு க்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்வது நல்லது. குறைந்த பட்சம் 3 முத ல் 5 மணி நேரம் மின்சாரம் து ண்டிக்கப்படும் நேரத்தில் லைட் மற்றும் ஃபேன் போன் றவற்றை இன் வெர்ட்டர் மூலம் இயக்கிக் கொள்ளலாம். இதில் நிரப்பப்படும் டிஸ்டில்டு வாட்டரை பெரும்பாலும் டீலர்களே ஆறு மாதங் களுக்கு ஒரு முறை நிரப்பி விட்டு அதற்கான தொகையைப் பெற் றுக்கொள்வதால், பராமரிப்பு விஷயத்தி லும் நமக்கு டென்ஷன் இல்லை. ஒரு வே ளை நீங்களே பராமரித்துக் கொள் கிறீர் கள் என்றால், பேட்டரிக்கு, பயன்படும் டிஸ்டி ல்டு வாட்டர் வாங்கிக் கொள்ளலாம். ஒரு லிட்டர் 14 ரூபாய்தான். பெட் ரோல் பங்கு களிலே கிடைப்பதனால், சுலபமாக வாங்கிக் கொள் ளலாம். மேலும் இன்வெர்ட்டர் உங்க ளுக்குஅதிக காலம் உழைக்க வேண்டு மெனில், ஏசி, ஃபிரிட்ஜ் போன்றவைகளை அதிகம் பயன் படுத்துவதைத் தவிர்க் கவும்.

அதிகம் பணம் போட்டு உங்கள் தேவைக்கு அதிகமான வாட்ஸ் தரும் இன்வெர்ட்டர்களைத் தவிர்த்து, உங்கள் வீட்டின் பயன் பாட்டைப் பொறுத்து வாங்கினால், நிச்சயம் லாபகரமானதுதான்.

உதாரணமாக கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என்ற சிறு குடும்பத்திற்கு எனில் 650 வாட்ஸ் கொண்ட இன்வெ ர்ட்டர் போதுமானதாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்.
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம்  வரவேற்கிறது.

உங்களது கருத்துக்களையும் ஆலோசனை தெரியப்படுத்தா விட்டா லும் பரவாயில்லை. இந்த இணையத்தில் உள்ள இடுகை (Post) களை உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த இடுகைக்கு கீழே SHARE என்ற வார்த்தையின் நேரே email என்று வார்த்தையை கிளிக்  செய்து உங்களது நன்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: