Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌னவுகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்

கனவுகள்… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளை யாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங் களுக்கு பிடித்த மானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம் பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண் டே போகலாம்.

ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத் தில் வரும் கனவுகளைப் பற்றி பல் வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன.

அதாவது மனிதனின் மூளையில் பதி வாகி யிருக்கும் விஷயங்கள்தான் அவ்வப்போது அவனது உறக் கத்தில் வரும் கனவாகிறது என்கிறது அறிவியல்.

ஒ‌வ்வொரு கனவு‌க்கு‌ம் ஒ‌வ் வொரு பல‌ன் இரு‌க்‌கிறது. அது வு‌ம் எந்தெந்த நேரத்தில் எந்த மாதிரியான கனவு கண்டாலும் அதற் கான ஒரு பலன் இருக்கிறது என்கிறது சாஸ்திரம்.

நள்ளிரவில் காணும் கனவு ஓரா ண்டுக்குள் பலிக்கும், விடியல் நே ரத்தில் காணும் கனவு உடனே பலிக்கும், பகல் கனவு பலிக் காது என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கி றோம்.

கனவில் விலங்குகளைப் பார்த்தால், தெய்வங்களைப் பார்த் தால், திரும ணம் நடந்தால் என ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக் கும் என்பதையும் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் படித் துள்ளோம்.

பொதுவாக கனவுகள் கருப்பு – வெள் ளைகளாகத்தான் இருக்கும்.

கண் பார்வை குறைபாடு இருப்பவர் களின் கனவுகளில் உருவங்கள் இருக் காது. அவர்களது கனவில் பேச்சுக் குரல் மட்டுமே இரு க்கும்.

‌ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை.

கடைசியாக தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் எண்ணும் எண்ண ங்கள் தான் பல சமயங்களில் கனவுகளாக வருகின்றன.

நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை மனக் கண்ணில் பார்ப் பதே கனவு எனப்ப டுகிறது.

நாம் காணும் அனைத்து கனவுகளும் நமது நினைவில் நிற்ப தில்லை.

புதிதாக நாம் செல்லும் ஓரிடத்தை ஏற்கனவே பார்த்ததுபோன்ற ஒரு எண்ணம் தோன்றும். அது கனவி‌ல் க‌ண்ட இடமாகவு‌ம் இரு க்கலாம்.

ஒருவர் இறந்துப்போவது போன்று கனவு கண் டால் அவருக்கு ஆயுள் கெட்டி என்று எண்ணிக் கொள்ளலாம்.

உறங்கச் செல்வதற்கு முன்பு இனிமையான நிகழ்வுகளை அசை போட்டபடி கடவுளை வணங்கிவிட்டு உறங்கச் செல்வதன் மூலம் இனிமை யான கனவுகளை காணலாம்.

மன‌தி‌ற்கு‌ப் ‌பிடி‌த்தமான மெ‌ன்மையான பாட‌ல்களை‌க் கே‌ட்ட படியு‌ம் உற‌ங்க‌ச் செ‌ல்லலா‌ம். ந‌ல்ல உ‌ற‌க்கமு‌ம் வரு‌ம். அ‌தி‌ல் அருமையான கனவுகளு‌ம் வரு‌ம்.

இதுபோன்று கனவைப் பற்றி சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் நீங்கள் படித்துமுடித்து உறங்கிவிட்டால் யார் பொறுப்பு. அதற்காக இத்துடன் முடித்து விடுகிறேன்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: