Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகைப்படக் கலையின் புதிய பரிமாணம்: உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும் அசையும் படங்கள்!

இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது.

உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலை ஞர்கள் இணைந்து உரு வாக்கியுள்ளனர்.

இவை அசைவுகளுடன் கூடிய படங்கள்.

இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங் கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.

ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காண லாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும்.

ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர்.

ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப் பட்டுள்ளது.

இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப் பகுதி யில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும்.

ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத் தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்.
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம்  வரவேற்கிறது.

இந்த இணையத்தில் உள்ள இடுகை (Post) களை உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த இடுகைக்கு கீழே SHARE என்ற வார்த்தையின் நேரே email என்று வார்த்தையை கிளிக்  செய்து உங்களது நன்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: