Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நற்பணி மன்றங்களை கலைத்த அஜித்!: அறிக்கை முழுவிவரம்

நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலை ப்பதாக அறிவித் துள்ள அஜித்,  நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண் டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40 வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமா ர் வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்ப தாவது:-

அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயண த்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலை ஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர் கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும்  இந்த அறி க்கை மூலம் என் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். நீண்ட நாட் களாகவே என்னை சிந்திக்க வை த்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறி க்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுய நலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விரு ப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண் டதும் இல்லை, பயன்படுத்தவும்மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அத ற்கு ஆதரவு தரவும் – சரியாக இல்லா விட்டால் விமர்சிக்கவும் ரசிகர் களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக் கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என் பதை நான் அறிவேன். என் ரசிகர் களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தி யாசம் பார்ப்பதில்லை – பார்க்கவும் மாட் ‌டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னி ச்சையாக செயல் படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற் பணி இயக்கத்தை பயன் படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுப டுவது கூட யாருக்கும் இடையூறு இல்லா மல், குறிப்பாக தங்களது குடும் பத்திற்கு சுமையாக இல்லா மல் செய்ய வேண்டும் என்ப தையே நான் வலியுறுத்தி வரு கிறேன். நல திட்டங்கள் செய் வதற்கு இயக்கம் என்ற அமை ப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னு டைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லை மையின்கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித் குமார் நற்பணி இயக்கத் தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரை யும் உன்னிப்பாக கவனிக்கி றார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர் களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர் களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும். இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக் கிறார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: