Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பறவைகளின் தூக்கம்!

பறவை இனத்தில் பல, வித்தி யாசமான முறையில் தூங்குகி ன்றன. அப்படி விந்தையாகத் தூங் கும் சிற பறவை கள்…
*`வவ்வால் கிளி’ என்ற பற வை ஒரு காலால் ஏதாவது கிளையை ப் பிடித்துக்கொண்டு தலைகீழா கத் தொங்கிக் கொண்டே தூங்கு கிறது.
* `ஸ்விப்ட்’ என்ற பறவை, பெரிய பந்து போல ஒன்றையொன்று கட்டிக் கொண்டு கூட்டமாகச் சேர் ந்து தூங்கும்.

* துருவப் பிரதேசங்களில் காணப்படும் ஒருவகை வாத்து, பனிக் கட்டியில் ஓட்டை செய்து அதி ல் படுத்துத் தூங்கிவிடு கிறது

* நியூசிலாந்தில் உள்ள கிவி பறவை, பகல் நேரங்களில் பூமி க் கடியில் காணப்படும் விரி சல் வளைவுகளில் நுழை ந்து கொ ண்டு தூங்கும்.

* `கிரீப்பா’ என்ற பறவை மரப் பொந்துகளில் மல்லாந்து படுத் துக் கொ ண்டு தூங்குகிறது.

* `த்ரஷ்’ என்ற பறவை குளிர்காலத்தில் தினமும் 15 மணி நேரம் தூங்கும். ஆனால் கோடை கால த்தில் இரவு இரண்டு மணிக்கே விழித்து விடும். பின்னர் மறு நாள் இரவு 10 மணிக்குத்தான் தூங்க ஆரம்பி க்கும்.

* ஆஸ்திரேலியாவில் காணப் படும் `தவளை வாயன்’ (பிராக் மவுத்) என்ற பறவை சரியான கும்ப கர்ணன். அதைக் கையில் எடுத்தாலும் தூக்கம் கலை யாது.
பொதுவாகப் பறவைகள் உறங்கும்போது தமது இறகுகளைச் சிலிர் த்துக் கொண்டு உப்பலாக வைத்துக்கொள்ளும். அதனால் இறகுகளு க்குள் காற்றுப் புகுந்து கொண்டு அவற்றின் உடல் வெப்பம் வெளியேறி விடாமல் தடுக்கும். இதன் காரணமாகவே சில பாலூட்டிகளும் தமது உடலைப் பந்து போலச் சுருட்டிக் கொண்டு தூங்குகின்றன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: