Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூச்சிகளைக் கொன்று ருசிக்கும் தாவரங்கள் (அசைவத் தாவரங்கள்)

சில செடிகளின் மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின் றன. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன் ற இடங்களில் இது போன்ற தாவரங்களை க் காணலாம்.  ஜாடி போன்ற பூக்களைக் கொண்ட `பீட்சர்’ என்ற தாவ ரமும், `சன் ட்’ மலரும், `வீனஸ் பிளை டிராப்’ மலரும் பூச்சிகளைக் கொன்று ருசிப்பதில் வல்லவை.

சில தாவரங்கள் முழுநேரமும் பூச்சிகளையும், புழுக்களையும் உணவாக உட்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றன. உலகின் பல பகுதிகளிலும இத்தாவரங்கள் காணப்படு கின்றன. இவற்றுக்கு `டிரா சீரா’, `டயானியா’ என்று விஞ் ஞானிகள் அறிவியல் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  இந்த அசைவத் தாவரங்கள் தங்க ளின் இலைகளில் மிகச் சிறிய ரோமம் போன்ற அமை ப்புகளைக் கொண்டிருக் கின்றன. மெல்லிய ரோமங் களில் பசை போன்ற பொருள் காணப்படுகிறது.

எனவே இவற்றின் மீது அமரும் புழு, பூச்சிகள் ஒட்டிக்கொள் கின்றன. பின்னர் அவற்றைத் தனது இலை களால் மூடிச் சுருட்டிக் கொல் கிறது. அந்த உயிரினங்களை அமிலம் போன்ற சுரப்புகளால் கொஞ்சம் கொஞ் சமாகக் கரைத்துக் கிரகித்து விடுகிறது.  பின் மறுபடி இலையை விரித்து அடுத்த பூச்சியின் வரவுக்காகக் காத்திருக்கிறது. இந்தத் தாவரம் மண்ணில் இருந்து நீரையோ, சத்துகளையோ எடுத்துக் கொள்வதில்லை.

இத்தாவரங்களுக்குத் தேவையான சத் து முழுவதும் உயிரினங்களில் இருந்தே கிடைக்கிறது.  இதைப் போன்ற விசித்தி ரமான தாவரங்கள் இந்தியாவில் அரிது. அபூர்வமாக நம் நாட்டின் வறண்ட காடுகளிலும், சில சதுப்புநிலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இப்படி பூச்சிகளைக் கொன்று சாப்பிடும் தாவரங்கள் பெரிதாக இருக்கும் என்று நீங்கள் நினை த்தால் தவறு. இவை சிறிதாகவே இருக்கின்றன. 3 முதல் 5 அங்கு லமே இருக்கும்.

பூச்சிக்களை கொன்று ருசிக்கும் தாவர்ங்கள் – வீடியோ

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: