Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் குழந்தை விடாது அழுகிறதா?

உங்கள் குழந்தை அழுகிறது. வீறிட்டுக் கத்துகிறது!  ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள்.

ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல் லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரிய வில்லை.

எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன.

ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல.

இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் கண்ணீர் துயரளிக்கிறது.

ஏதாவது செய்ய வேண்டும் என மனம் துருதுருக்கிறது. உங்களால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டீர்களே என மூளை அறிவுறுத்துகிறது.

இன்னமும் குழந்தை அழுது கொண்டே இருக் கிறது. எதையாவது தப்பவிட்டு விட்டேனா என்ற குற்ற உணர்வு மேலெ ழுகிறது.

பதற்றப்படாதீர்கள்.

சற்று நிதானமாக யோசியுங்கள்.

அடிப்படை விடயங்களுக்கு முன்னுரி மை கொடுங்கள்.

*குழந்தைக்கு பசி எடுத்திருக்கக் கூடும்.

*அல்லது பாலுடன் புகுந்த காற்று ஏப்பமாக வெளியேறாது வயிற்றில் மந்தமாக இருக்கக் கூடும்.

*நப்பி நனைந்து அசௌகர் யமாக உணரக் கூடும்.

*சற்று அசதியாக இருந்து தூக் கத்தை நாடுவதாகவும் இருக் கலாம்.

*நீண்ட நேரம் படுத்திருந்ததா ல் அலுத்த குழந்தை மாறுத லுக்காக உங்கள் மடியை அல் லது தள்ளுவண்டியை நாடுவ தாக இருக்கலாம்.

*இவை எதுவுமின்றி உங்கள் அன்பை, அருகாமையை, அர வணைப்பை நாடுவதாக உங்கள் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காகவும் இருக்கலாம்.

ஏனெனில் அழுகை அதன் மொழி. இப்பொழுது அது மட்டுமே தொடர் பாடல் ஊடகமாகிறது. அதன் மூலம் உங்களுக்கு தனது விருப்பத்தை உணர்த்த முயல் கிறது.

மேற் கூறிய எதுவுமே இல்லாவிட்டால், உடல் ரீதியான பிரச் சனை ஏதும் இருக்கறதா எனப் பாருங் கள். குழந்தைக்கு சற்றுக் காய்ச்சல், வயிற் றோட்டம், சளி, இருமல் போன்ற ஏதாவது சிறு வருத்தங்கள் இருப்பதா லும் அழக் கூடும் அல்லவா?

அவை யாவுமே சரியாக இருந்தால் அடு த்து என்ன செய்வது என்ற கவலை உங் களை ஆட்கொள்ளும். எதைச் செய் தாவது உங்கள் செல்லத்தின் கண்ணீரை நிறுத்த வேண்டும் என்ற ஆவேசம் எழும்

முக்கியமானது உங்களை நீங்களே நிதான ப்படுத்த வேண் டியதுதான்.

*நிதானமாக ஆழ மூச்சு எடுங்கள்.

*ஒன்று இரண்டு எனப் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள்.

*’ஒன்றுமில்லை கண்ணா’ என் பது போன்ற ஆறுதல் வார்த் தைகளை குழந்தைக்கு சொல் லுங்கள்.

*மீண்டும் மீண்டும் தடவிக் கொண்  டே சொல்லுங்கள்.

*என்னால் எதுவும் செய்ய முடிய வில்லையே, அழும் குழந் தையை சமாதானப்படுத்தும் ஆற்றல் எனக்கி ல்லையே எனக் குற்ற உணர்வற்கு ஆட்படுவதைத் தவிருங்கள்.

சில தருணங்களில் காரணம் ஏதும் இன்றிக் கூட குழந் தைகள் அழுவ துண்டு என் பதை மனதில் புரிந்து கொ ண்டால் மனம் ஆறும்.

அந்தச் சூழலிலிருந்து உங்கள் மனத்தை பிரித்து எடுங்கள்.

மென்மையான இசை பின்ன ணியில் ஒலித்தால் உங்கள் மனத்தில் உள்ள நிராசை விலகி நம்பி க்கை பிறக்கும். குழந்தையும் இசையில் இணங்கக் கூடும்.

கணவர், அம்மா, அப்பா, சகோ தரம், பாட்டி போன்ற ஒருவ ரின் பாதுகாப்பில் உங்கள் குழ ந்தையை சற்று நேரம் விட் டுவிட்டு சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

எந்த உதவியும் கிட்டாவிட் டால் குழந்தையை பிராமில் அல்லது தொட்டிலில் பாது காப்பாக விட் டுவிட்டு மற்றொரு அறைக்குச் சென்று சற்று ஆறுதல் எடுங்கள். குழந்தை சற்று அழுவதை கவனத்தில் எடுக்காது உங்கள் மனத்தை நிதானப்படுத்துங்கள்.

இவை எதுவும் சரிவரா விட் டால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அல்லது தள்ளு வண் டியில் ஏற்றிக் கொண்டு வீட்டு முற்றத்தில் உலாவுங்கள். வெளி யே காற்றாற உலாவப் போவதும் உதவக் கூடும்.

ஷொப்பிங் கொம்பிளக்ஸ் அரு கில் இருந்தால் குழந்தையுடன் ஒரு நடை போய் வாருங்கள். புதிய சூழல் உங்கள் இருவருக்குமே புத்துணர்ச்சி அளிக்கும்.

சிறுகுழந்தை உள்ளவர்களுக்கு போதிய தூக்க மின்மை பெரும் பிரச்சனையாகும். குறைந்த தூக்கம் உடலையும் மனதையும் அலுப்ப டையச் செய்துவிடும். குழந்தை அழுவது போன்ற சாதாரண பிரச்சனை களைக் கூட சமாளிக்க முடியாமல் செய்து விடலாம். என வே போதிய தூக்கம் உங்களுக்கு முக்கியம். குழந்தை தூங்கு ம்போது நீங்களும் தூங்கி ஓய்வு எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யக் கூடாதது ஒன்று உண்டு!

குழந்தையை அமைதிபடுத் துவதாக அல்லது அதற்கு விளையாட்டுக் காட்டுவ தாக எண்ணிக் கொண்டு வேகமாக ஆட்டவோ, உலுப்பவோ, தூக் கிப் போடவோ முயல வேண்டாம்.

குழந்தைகளின் கழுத்துத் தசைகள் பெலவீனமானவை. தமது தலையை தாம் தூக்கி நிறுத்தவே சிரமப்படுபவை. கடுமையாக தூக்கிப் போட்டு ஆட்டினால் கழுத்து எலும்புகள் விலகலாம். அதனால் வலிப்பு, பார்வையிழப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே குழந்தையை மெதுமையாக பூப்போலக் கையாளுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: