Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எரிமலை குழம்பினால் ஏற்படும் நன்மைகள்

எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளி வருகிறது. அந்தக் கந்தக ஆவி யானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள் ளங்களில் படிந்து விடுகிறது. இம் மாதிரியான எரிமலைப் படிவு கள் உள்ள எரி மலைப் பகு திகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், மெக்சி கோ, சிசிலி முதலிய இடங்களில் காணப் படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக் கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய் வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது நோய் தீர்க்கும் சல்பா மருந்து தயாரிக்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன் றவை தயா ரிப்பதற்கும் பயன்படுத்துகி றார்கள்.

அனல் குழம்பு குளிரும்போது மேலிருந்து கீழே பாறையாக இறுகிக் கொண்டே போவதால் தங்கம், வெள்ளி, ஈயம், துத்த நாகம், பாதரசம் போன்ற பல உருகிய உலோகப் பொருட்களும் கட்டியாக மாறிப் பாறைக ளோடு கலந்து விடுகின்றன. அவ்வாறு பூமிக்குக் கீழே சில அடி ஆழத்துக்குள்ளாகவே உலோகக் குழம்புகள் பாறைக் குழம்போடு வந்து படிவதால்தான் சுரங்கங்கள் மூலம் அவை நமக்கு எளிதில் கிட்டு கின்றன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply