ஜெ. ஜெயலலிதா: தமிழ் நாட்டு அரசியல் தலை வரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப் பட நடிகையும் ஆவார்.
தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநி லம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவ ர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேல் கோட் டைக்கு வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒன்று தான் ஜெய லலிதாவின தாத்தா குடும்ப மும். அவர் இந்த ஊர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். மேல்கோட்டையில் ஜெயலலிதா வின் தாத்தாவை விட பாட்டி யதுகிரி அம்மா தான் பிரபலம்.[1]
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். பின்னர், அ.தி.மு.க.வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினராக பணி யாற் றினார். எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு பிறகு 1989 ஆண்டில் அ.தி.மு.கவின் தலைமைப்பொறுப்பேற் று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1989 முதல் 1991வரை சட்ட மன்ற எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழக முதல்வராகவும் இருந்தார். தற்போதும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.