Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“மே” (தொழிலாளர்) தின வரலாறு

தொழிலாள நண்பர்கள் அனைவருக்கும் விதை2விருட்சத்தின் இதயம் கனிந்த “மேதின” சிறப்பு வாழ்த்துக்கள்

தொழிலாளர் போராட்டம்

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் தொழிலா ளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக்கட்டாய வேலை செய்ய நிர்ப் பந்திக்கப் பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழி லில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந் தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்ட த்தை நடத்தினர். 1834இல் ஜனநாய கம் அல்லது மரணம் என்ற கோஷத் தை முன்வைத்து பெரும் கிளர்ச் சியில் ஈடுபட்டனர். இவையனை த்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரி க்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற் றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

முதல் மே நாளின் போது உருசியா வில் ஒட்டப்பட்ட சுவரொட்டி

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப் பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடை பெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத் தில், ரஷ்யத்தொழிலாளிகளின் நிலை மை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளா தார போராட்டம் – அரசியல் போராட்ட மாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழி லாளி களின் 8 மணி நேர வேலை க்கான போராட்டங்களே ரஷ்யப் புரட் சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொ ழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து வேலை நிறு த்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல் பியாவிலும், பென்சில்வே னியாவிலும் இதே கோரிக் கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனி யாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணை த்து “அமெரிக்க தொழிலாளர் கூட்ட மைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந் தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டி மோர் என அமெரிக்கா முழுவ தும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங் கியது. இவ்வேலை நிறுத்த த்தில் 1200 க்கும் மேற் பட்ட நிறுவனங்க ளில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடு த்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத் தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெ றவில்லை. வேலை நிறுத்த த்தில் பங்கே ற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சி கனில் மட்டும் 40,000 தொழிலாளர் களும், சிக்காகோவில் 70 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கா ர்மிக் ஹார் வஸ்டிங் மெ ஷின் நிறுவனத்தின்” வாயி லில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திர ண்டு கண்டனக் கூட்ட த்தை நடத்தினர். இங்கு இடம் பெற்ற கலவரத்தில் 4 தொ ழிலாளர்கள் காவல் துறை யினரின் துப்பாக்கிச் சூட்டி ற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலா ளர்கள். 2500 தொழிலாளர்கள் கல ந்து கொண்ட கண்டனக்கூட்டம் அமைதியான முறையில் நடை பெற்றது. இந்நேரத்தில் காவல் துறையினர் அனைவரையும் கலை ந்து செல்லுமாறு கூறினர். இவ் வேளையில் திடீரென்று கூட்ட த்தில் வெடிகுண்டு வீசப் பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல் துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப் பாக்கிச் சூடு நடத்தித் தொழிலா ளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவ ர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழ க்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல் பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக் கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெ ரிக்க தேசமே அணி திரண் டது. நாடு முழுவதும் 5 லட் சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழு வதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக் கப்பட்டது.

அமெரிக்க தொழிலாள  ர்களின் 8 மணி நேர வேலை க்கான போ ராட் டமும், சிகாகோ தியாகி களின் தியாகமும்தான் இன் றைக்கு மே தினமாக – உழை ப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வ தேச தொழிலாளர் பாராளு மன் றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட் டத்தில் பங்கேற்றனர். பிரெட் ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன் னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதி யை இம்மாநாடு கடுமையாக கண் டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: