Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறையுணர்வுடன் நடக்க வேண்டும் – பைபிள்

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையு ணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவு ளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவு ளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மை யோடும் கனிவோ டும் பொறுமை யோடும் ஒருவரை ஒருவர் அன் புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண் டும்.* “எப்போதும் நாம் கடவுளோடு இருப்போம்’.

இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள். *நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவும், சமுதாயத் தில் இருக்க வேண்டும்.* அழிந்து போகும் உணவுக்காக உழைக் காமல், நிலைத்த வாழ்வு தரும் பக்தி என்ற அழியாத உணவுக் காகவே உழைக்க வேண்டும்.* மனவலிமை கொண்ட நாம், வலு வற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப் பட்டிருக் கிறோம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply