Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்தின் உண்மையான அர்த்தம் . . .

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணை யாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழ மொழி உண்டு.

 ஆம்… பெற்றோர்களும், சுற் றத்தார்களும், நண்பர் களும் சூழ நின்று ஆசீர் வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த் தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டு வதில்தான் இருக் கிறது!

 அப்படி நீங்களும் ஒரு ஆத் மார்த்த இணையாக, துணை யாக இருக்க… தம்பதிகளுக்கும், தம்பதி ஆகப் போகிறவர்களுக் கும் இல்லற மந்திரம் போதிக் கிறது இந்தக் கட்டுரை. மந்தி ரங்கள் உங்கள் மண வாழ்க்கை யில் மகிழ்ச்சியை நிரப்பட்டும்!

 இப்போதெல்லாம் நிச்சயத்தின் போதே சபையில் வைத்து பெண்ணுக்கு மொபைல் போ னை பரிசாக வழங்குகிறார் மாப்பிள்ளை… முகூர்த்த நாள்வரை இருவரும் பரஸ்பரம் பேசி, பகிர்ந்து கொள் வதற்கு!

பெரும்பாலான பெற்றோர்களும்கூட, தம் பிள்ளைகளின் இது போன்ற திருமணத்துக்கு முந்தைய பழக்கங்களுக்கு அலட்டிக் கொள்ளா மல் பச்சைக்கொடி காட்டி விடுகின்ற னர். எனவே, நிச்சயம் முடிந்த நாளி லிருந்து திருமண நாள் வரையிலான இந்தக் காலத்தை, ‘மண இணைவு’ க்கு தங்களை மனரீதியாக தயார் படுத்திக் கொள்ள மாப்பிள்ளை – பெண் இருவருமே பயன்படுத்திக் கொள்வது குட்!

 1. கற்பனையில் அவுஸ்திரேலியாவு க்குப் போய் தாராளமாக டூயட் பாடு ங்கள். அதேசமயம், துணையின் வீட் டு உறவுகளோடு சந்தோ ஷமாக இருக்கும் பாச சீன்களையும் மனதில் ஓடவிடுங்கள். இது புதிய உறவுகளுடன் சுமுகமாவதற் கான மனப்பயிற்சியாக அமை யும்.

 2. வருங்கால துணையோடு பீச், கோயிலுக்குப் போவதில் தவ றில்லை. அதேபோல அவர் கள் வீட்டுக்கும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். கூச்சமாக இருக் கிறதா..? சரி, போனிலாவது மாமனார், மாமியார், நாத்த னார் என மற்ற உறவுகளோடு பேசிப் பழகுங்கள். அது திரும ணம் முடிந்து நீங்கள் அந்த வீட்டில் கால் எடுத்து வைக்கும்போது, அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியத்தைக் குறைத்திருக்கும்.

 3. ஒருவேளை நீங்கள் அவர்களின் வீட் டுக்கு வருவது, பேசுவது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் சொன் னாலோ, செய்கையால் உணர்த்தினா லோ ‘டல்’ ஆகாதீர்கள், அவர்களை ‘பழைய பஞ்சாங்கம்’ என நினைக்காதீர் கள். புன்னகையோடு ஏற்று சந்திப்பைத் தவிருங்கள்.

 4. தயக்கத்தின் காரணமாகக்கூட துணையின் உறவுகள் ஆரம் பத்தில் உங்களுடன் ஒட்டாமல் இருக்கலாம். உடனே அவசரப் பட்டு அவர்களைப் பற்றி உங்களுக்குள் தீர்ப்பு எழுதி, அதே மன நிலையோடு அவர்களை அணுகாதீர்கள்.

 5. நிச்சயதார்த்த பஜ்ஜி, சொஜ்ஜி ஆறும் முன்பே அறிவுரைகள் ஆரம்பித்துவிடும். எல் லாவற்றையும் கேட்டு திகிலாகாதீர்கள். எது சரி, எது தவறு என அமைதியாக யோசித்து சரியானதை ‘டிக்’ அடியுங்கள்.

 6. ‘கைக்குள்ள போட்டுக்க… முறுக்கா இரு’ போ ன்ற பிறந்த வீட்டு உபதேசங்களை செவிப் பறை யோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்த விதை, பின் பல பிரச்னைகளுக்கு வேராகிவிடும்.

 7. துணையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத் திலேயே அதிகம் வளர்த்துக்கொள்ளாதீர்கள். முடிந்தவரை மனதை காலி பையாக வைத்துக் கொண்டு கிடைப்பதை அமைதியாகச் சேகரியு ங்கள். பிடிக்காததை பிறகு தவிர்த்துவிடலாம்.

 8. இந்தக் கால கட்டத்தில் திருமண முறிவு, கல்யாணத்தன்று தகராறு போன்ற நெகட்டிவ் செய்திகளைக் கேட் கவோ, படிக்க வோ சந்தர்ப்பம் வருவதுபோல் தெரிந்தால், கூடுமானவரை அவற்றைத் தவிர் த்துவிடுங்கள். நல்லவை மட்டுமே மனதுக்குள் போகட்டும். மேரேஜ் கவுன்சிலிங் அவசியமாகும் சூழல் இது!

 பெண்களுக்கு பதினாறிலும், ஆண்களுக்கு இருப திலும் என நம் முந்தைய தலைமுறை திருமண ங்கள் முடித்து வைக்கப்பட்டபோது, அந்த வய தில் இருவருக்குமே அவரவர்க்கென பெரிய அளவில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் வளர்ந்திருக்க வில்லை. எனவே, நாணலாக வளை ந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பழகிக் கொண்டார்கள்.

 ஆனால், இன்றைய சமூக,  மாற்ற ங்களால் பெண்கள் 26 வயதுக்கு மே லும், ஆண்கள் 29-35 வயதிலும் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இருவருக்குமே சுயசிந்தனை, சுதந்திரம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் என்றெல்லாம் அவரவர் களுக்கென கேரக்டரை சமரசங் களின்றி அமைத்துக் கொள்கிறா  ர்கள்.

 அப்படி வெவ்வேறு துருவங்களாக இருக்கும் இருவர், மணவாழ்க்கை யில் இணையும்போது முட்டி முளை க்கின்றன பிரச்னைகள். எனவே, மா லை சூடிக்கொள்ளும் முன்னர் அவர்களுக்கு திரு மணம் பந்தம், வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் அவசிய மாகிறது. அவற்றுள் சில இங்கே…

 9. சாதாரண வேலை என்று நாம் நினை க்கும் எந்த வேலையுமே… பயிற்சி க்குப் பின்தான் சுலபமாக கைகூடும். அப்படி யிருக்கும்போது ஆயிரங்காலத் துப் பயிர் திருமண பந்தத்தில் இணைய பயி ற்சி இல்லாமல் எப்படி? குறிப்பாக மன தளவிலான பயிற்சிகள் அவசியம். அது சுயபயிற்சியாகவும் இருக்கலாம்… அனு பவம் வாய்ந்த பெரியோரின் வழி காட்டுதல்களாகவும் இருக்கலாம். அல் லது குடும்பநல ஆலோசகர்களின் அறி வுரைகளாகவும் இருக்கலாம்.

 10. துணையின் ‘ஆத்மார்த்த’ உறவாகி விட  வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால், திருமணம் நடந்த ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அது நிகழ்ந்துவிடாது. அதற்கு அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதல் என பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவை நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லாதவற்றை வளர் த்துக் கொள்வதும் முக்கியம்.

 11. என்னதான் இருந்தாலும் உங்கள் பக்க உறவு களோடு நீங்கள் இருப்பது போன்ற அந்நியோன் யத்துடன் துணையால் இருக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அதுபோன்ற விஷயங் களுக்கு மனதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.

 12. நீங்கள் நெடுங்காலமாக பின்பற்றும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் சூழ் நிலையும் ஏற்படலாம். ‘அதெல்லாம் முடியாது’ என முரண்டு பிடிக்காமல், அட்லீஸ்ட் அதை தள்ளி வையுங்கள். தேவைப்படும்போது எடுத்துக் கொள்ள லாம்.

 13. குறிப்பாக, உங்களுக்குத்தான் உயிர் தோழி-தோழன். உங்கள் துணைக்கல்ல. எனவே, அவர்களுக்கு நேற்று வரை தந்த அதே முக்கியத்துவத்தை, நேரத்தை தர இயலாது என்பது உணருங்கள். ‘நான் கல் யாண மானாலும் மாறல’ என முறுக்காதீர்கள்.

 14. குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் இரண்டு விஷயங்கள்… அன்பு, நம்பிக்கை. இவை இரண் டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றின் நூலிழை அறுந்தாலும் இன்னொன்றில் நூலிழை அதுவாகவே அறுந்துவிடும் என்பதால் எப்போதும் இவை இரண்டிலும் நேர்மையாக இருப்பது ஆரோக்கியமானது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: