Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மக்கள் அதிகம் விரும்பும் போன்கள்

மொபைல் சந்தையில், சுற்றி வந்தால், ஒவ்வொரு நிலையிலும், எந்த வகை மொபைல் போனை மக்கள் அதி கம் விரும்பு கிறார்கள் என்று தெரிய வரும். இந்நிலைகளில் அதிகம் விற் பனை யாகும் போன்களையும் கண்டறியலாம். மார்ச் நான்காம் வாரத்தில், வெளியான தகவல்க ளின்படி கீழ்க்காணும் மொபைல்கள் மக்கள் மனதைக் கவர்ந்தவையாக, அதிகள வில் விற்பனை யாயின.

வேறு நிறுவனப் போன்களும், வேறு சில நகர ங்களில் விற்ப னையாகி யிருக்கலாம்.

1. எல்.ஜி. ஏ 165: இது ஒரு பார் டைப் போன். எடை 81 கிராம். 110 x 47.5 x 14.1 மிமீ என்ற அளவில் வடிவமை க்கப்பட்டது. ஒருமுறை சார் ஜ் செய்தால் 15 மணி நேரம் வரை பேசும் திறனை அளிக் கிறது. நான்கு அலைவரி சை களில் இயங்குகிறது. 5.1 செமீ அளவில் திரை உள் ளது. 0.3 மெகா பிக்ஸெல் திறனுடன், 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் கொண்ட விஜிஏ கேமரா கிடைக்கிறது. இதன் மெமரி 3.9 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 2 ஜிபி வரை நினைவகத்திறனை அதிக ப்படுத்தலாம். இரண்டு சிம்களை இயக்கலாம். எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளன. எஸ்.எம். எஸ். மற் றும் எம்.எம். எஸ். வசதிகளும் உள் ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,590 எனக் குறிக்கப்பட்டு ள்ளது. LGA165

2. சாம்சங் இ 1172: இதுவும் ஒரு பார் டைப் போன். 72 கிராம் எடையில் 108.7 x 46.1 x 14.1 மிமீ என்ற அளவில் வடிவமைக் கப்பட்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 12 மணி நேரம் பேச லாம். இரண்டு அலை வரிசைகளில் இயங்குகிறது. 1.52 அங்குல அகலத்தில் திரை உள்ளது. போனின் மெமரி 1 எம்பி. இரண்டு சிம்களை இய க்கலாம். இதில் கேமரா இல்லை. எஸ்.எம்.எஸ். மட்டும் அனு ப்பலாம். எம்பி3 பிளேயர் மற் றும் எப்.எம். ரேடியோ தரப் பட் டுள்ளன. இதனுடைய அதி க பட்ச விலை ரூ.1,250/-

3. நோக்கியா சி5: அழகான மொபைல் ஒன்று வாங்க வேண்டும் எனத் திட்ட மிடுப வர்களைக் கவர்ந்திழுக்கும் மொபைல் போனா க, நோக் கியா சி5 அமைந்துள்ளது. நோக்கியாவின் மொபைல் சர்வீஸ் மற்றும் பேஸ்புக் தொடர் புகளை இலவசமாகப் பெறும் வசதியுடன் தரப்பட்டிரு ப்பது இதன் இன்னொரு சிறப்பு. இதன் மெமரி 50 எம்பி. 16 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்த முடியும். வெள்ளை மற்றும் லேசான கிரே நிறம் கலந்து, அம்ச மாக இந்த போன் உள்ளது. சிம் ஒன்று மட்டுமே பயன்படுத்த முடியும். விஜிஏ வீடியோ அழைப்பு கேமரா ஒன்றும், வழக்கமான 3 எம்பி திறன் கொண்ட 2 எக்ஸ் ஸூம் வசதி கொண்ட கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளன. 3ஜி வீடியோ அழைப்பு, வீடியோ பிளே பேக், வீடீயோ பதிவு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., புஷ் மெயில், ஆகிய வசதிகள் கிடைக் கின்றன. எம்பி3 பிளேயர், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரீயோ எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத் கொண்ட இந்த மொபைல் போன் சிம்பியன் சிஸ்டத்தில் இயங்குகிறது.  இதன் அதிக பட்ச விலை ரூ.7,200/-

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: