Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உறக்கத்தில்தான் குழந்தைகள் வளரும்…

உறக்கத்தில்தான் குழந்தைகள் வளருகின்றன. இது பாட்டிமார் நமக்கு சொன்ன விடயம். அது சரியானது என்று விஞ்ஞானிகள் இப்போது ஆய்வு கள் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

இந்த வகையில் நடத்தப்பட்டுள்ள முத லாவது விஞ்ஞான ஆய்வில் இது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

பிள்ளைகள் அன்றாடம் தூங் கும் நேரம், அவற்றின் உடல் வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒன் றோடொன்று நெருங்  கிய தொடர்புடையவை. அதிக நேரம் தூங்குவது உட லின் வளர்ச்சியை அதிகரிக் கின்றது என்பதை விஞ்ஞா னிகள் முதற்தடவையாக ஒப்புக் கொண்டு ள்ளனர்.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் பற்றி ஒரு புரிந்துணர்வை ஏற்படுத் தவும், அவற்றின் உடல் வளர்ச்சி பற்றி தாய்மார் அறிந்து கொள்ளவும் இந்த புதிய ஆய்வின் முடி வுகள் வழியமைத்துள்ளன. அமெரிக்க விஞ்ஞா னிகளே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

குழந்தைகளை அதிகம் உறங்கச் செய்வது அவர் களின் உடல் வளர்ச்சியை உறுதி செய்கின்றது. தின சரி 4.5 மணிநேரம் மேலதிகமாக உறங்கும் குழந்தை களில் அதிக உடல் வளர்ச்சி அவதானிக் கப்பட்டுள் ளது.

இங்கு உடல் வளர்ச்சி என்பது உடலின் நீளத் தை அல்லது உயரத் தைக் குறிக்கின்றது. 12 நாட்களான 23 குழந் தைகள் தெரிவு செய்ய ப்பட்டு அவற்றின் உறக் கநேரம், மேலதிக உறக் கம் என்பன அவர்களின் பெற் றோரால் பதிவு செய்ய்பட்டு 17 மாதங்கள் அவற்றின் வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் ஆழமாக உறங்குகின்ற போதும், ஓரளவு கண் அயரு கின்றபோதும் உடல் வளர்ச்சிக்குக் காரணமான ஹோர்மோ ன்கள் அதிகம் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

2 Comments

  • Revathy

    My baby is 4months year old and she stil didnt turn front to back side. Am little bit concerned abt this.Can u pls solve this.

    • அன்புச்சகோதரிக்கு!
      விதை2விருட்சம் இணையத்தை பயன்படுத்தியமைககு நன்றி!

      தங்களுடைய பிரச்சனையை சற்று விளக்க‍மாக கூறினால், தகுதியான மருத்துவரை சந்தித்து அதற்கான விளக்கத்தினை பெற்று உங்களுக்கு அளிக்க‍ பெரிதும் உதவியாக இருக்கும்.
      – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: