Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓ.எஸ். குறிப்புகள் – 3

ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான மேலும் சில தொழில் நுட்பச் சொற்களுக்கு விளக்கம் இங்கே தரப்படுகிறது.

1. Embedded Object (எம்பெடட் (பதி த்தல்) ஆப்ஜெக்ட்): அப்ளி கேஷன் புரோகிராம் ஒன்றில் உரு வாக்கப்பட்டு, இன்னொரு அப்ளி கேஷனில் உருவாக்கப்பட்ட டாகு மெண்ட்டில் பதிக்கப் படும் ஆப் ஜெக்ட். எடுத்துக்காட்டாக அடோப் போட்டோஷாப் அல்லது எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமில் உருவான ஆப்ஜெக்ட் ஒன்றை, வேர்ட் டாகுமெண்ட்டில் எம்பெட் செய்வது. ஆப்ஜெக்ட் அல்லது படத்தி னை அப் படியே ஒட்டாமல், எம் பெட் செய்வதன் மூலம் அந்த ஆப் ஜெக்டின் ஒரிஜினல் பார்மட் அப்ப டியே வைக்கப்படுகிறது. இவ்வா று பதிக்கப்பட்ட ஒரு ஆப்ஜெக் ட்டை, அதன் ஒரிஜினல் புரோகி ராம் மூலம் எடிட் செய்திடலாம். விண்டோஸ் ஆப்பரே ட்டிங் சிஸ் டத்தில், ஆப்ஜெக்ட் ஒன்றைப் பதித்திட OLE (Object Linking and Embedding) என்று அழைக்கப் படும் தொழில் நுட்பம் பயன்படுத் தப்படுகிறது.

2. Event (நிகழ்வு): புரோகிராம் ஒன்றினால், அறியப்படும் ஒரு நிகழ்வு. கம்ப்யூட்டர் செயலா க்கம் அனைத்துமே, நிகழ்வு களின் தொடர்ச்சியே. எடுத் துக் காட்டாக, மவுஸ் கிளிக் செய்வது ஒரு நிகழ்வு. கீ ஒன்றினை அழுத்துவது மற் றொரு நிகழ்வு. மேக் இன் டோஷ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தும் இத்தகைய நிகழ் வுகளாலேயே இயக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான ஆப் பரேட்டிங் சிஸ்டத்தின் பதில் செயல்பாடுகள் தான் சிஸ்டம் செய ல்பாடுகள்.

3. File Handle (கோப்பு அடையாள எண்): பைல் ஒன்று திறக்கப் படுகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதற் கென ஓர் எண்ணை ஒதுக்குகிறது. இத னையே பைல் ஹேண்டில் என அழைக்கிறோம். பை லை ஆப்பரேட்டிங் சிஸ்டம் அணுகுகையில், பைல் ஹேண்டிலைப் பயன்படுத்தும். இந்த பைல் ஹேண்டில் களுக்கென கம்ப்யூட்டரின் மெயின் மெமரியில் தனி இடம் ஒதுக்கப் படும். இந்த மெமரியின் அள வைப் பொறுத்து, எத்தனை பைல் ஹேண்டில்கள் இங்கு தங்க வைக்கப்படலாம் என்பது முடிவாகும். அதாவது ஒரே நேரத்தில் எத்தனை கோப் புகள் திறக்கப்பட்டு பயன்படுத்தப் படலாம் என்பதனை அறிய லாம். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், அதிக பட்சம் எத்தனை பைல்கள் திறக்கப் படலாம் என்பதனை CONFIG.SYS என்ற பைலில் உள்ள FILES= என்ற ஸ்டேட் மெண்ட்டில் வரையறை செய்திடலாம்.

4. Interrupt (நிகழ்வினைச் சுட்டும் ஒரு சிக்னல்): ஒரு புரோகிராம் இயங்குகை யில், நிகழ்வு ஒன்று ஏற்ப டும் போது, அதனை, புரோ கிராமிற்கு எடுத்துக் காட் டுவது இந்த இன்டரப்ட் எனப்படும் சிக்னல் ஆகும். இது போன்ற ஒரு சிக்னல் கிடை க்கையில், அந்த புரோ கிராம் அதற்கான குறிப்பிட்ட செயல் பாட்டினை மேற் கொள்ளும். இவ்வாறு ஒரு சிக்னல் அனுப்பப்படுகையில், புரோ கிராம் தன் தொடர் செயல் பாட்டி னைத் தற்காலிக மாக நிறுத்தி வைத்து, சிக்னலுக்கான செயல்பாட்டில் இறங்கும். இன்டரப்ட் சிக்னல்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். எடுத் துக்காட்டாக, ஒவ் வொரு கீ அழுத்தலும், ஒரு இன்டரப்ட் சிக்ன லை அனுப்பும். பிரி ண்டர் போன்ற பிற துணை சாதன ங்களும் இன்டரப்ட் சிக்னல் களை அனுப்பலாம். இந்த வகை இன்டரப்ட் hardware interrupt என அழைக்கப்படுகிறது. புரோ கிராம் ஒன்றினால், ஏற்படுத்தப்படும் சிக்னல்கள் software interrupt என அழைக்கப்ப டுகின்றன. இதனை a trap அல்லது an exception எனவும் அழைக்கின்றனர். பொது வாக, ஒரு பெர்சனல் கம்ப் யூட்டர், 256 வகையான சாப்ட்வேர் இன்டரப்ட் மற்றும் 15 வகையான ஹார்ட்வேர் இன்டர ப்ட்களை சப்போர்ட் செய்கிறது.

5. Job (பணி): கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்படுத்தும் ஒரு வேலைக்கு Job என்று பெயர். இந்த வேலை ஒரே ஒரு புரோ கிராம் அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட புரோகிராம்களால் மேற்கொள்ளப் படலாம்.

6. Kernel கெர்னல் (மையம்): ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன் றின் மத்திய தொகுப்பு. ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தில் முதலா வதவாக லோட் செய்ய ப்படும் பகுதி இதுதான். மெயின் மெமரியில் எப்போதும் இடம் பெறும். மெமரியில் எப்போதும் இரு ப் பதால், இது அளவில் சிறி யதாக இருப்பது நல்லது; சிறிய தாகவே இருக்கும். ஆனால் அதே நேரத்தில், ஆப்பரேட்டிங் சிஸ்ட த்தின் மற்ற பகுதிகளுக்குத் தேவை யான அனை த்து சேவைகளையும் தந்து கொண் டே இருக்கும். இதன் முக்கிய சேவை களைக் குறிப்பிட்டுச் சொல் வதென் றால், மெமரி நிர்வாகம், செயல்பாடு, செயல்பாடுகளின் நிர்வாகம், டிஸ்க் கை செயல்படுத்தல் ஆகிய வற்றைக் கூறலாம்.

7. MBR மாஸ்டர் பூட் ரெகார்ட்: கம்ப்யூட்டர் பூட் செய்யப் படுகையில், இயக்கப்படும் முதல் புரோகிராம். எனவே ஹார்ட் டிஸ்க்கின் முதல் செக்டாரில் இது தங்கிச் செய ல்படும். பூட் செயல்பாட் டினை இது தொடங்கி வைக் கும். இதற்கு பார்ட்டிஷன் டேபிள் என்ற அமைப்பைப் பார்த்து, எந்த பிரிவில் இய க்கத் தொடக்கத்தினை மேற் கொள்ளலாம் என்று கணித்து மேற் கொள்ளும். பின்னர், புரோகிராமைக் கட்டுப்படுத்துவதனை, அந்த பிரிவில் உள்ள பூட் செக்டாருக்கு மாற்றிவிடும். பூட் செயல் பாட்டினை அது தொடர்ந்து எடுத்துக் கொள்ளும். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தில், FDISK /MBR என்ற கட்டளையுடன், MBR புரோகிராமினை நீங்கள் உருவாக்கலாம்.

இது குறித்து படிக்கையில், உங்கள் மனதில் MBR virus என்ற பெயர் நினைவிற்கு வரலாம். இந்த வைரஸ் ஒரு பொதுவான அபாயகரமான வை ரஸ். மாஸ்டர் பூட் ரெகார்ட் புரோகிராமிற்குப் பதிலாக, தன் குறி யீடுகள் அடங்கிய புரோகிராமினைப் பதிந்து வைக்கும். ஒவ் வொரு முறை கம்ப்யூட்டர் தொடங்கும்போதும் MBR செயல் படுத்தப் படுவதால், இது மிகவும் ஆபத்தான விளைவுகளைத் தரும். முன்பு இந்த வகை வைரஸ் மிகவும் அதிகமாகக் காண ப்பட்டது. குறிப்பாக பிளாப்பி டிஸ்க் வழியாக இவை பரவின.

8. Task Switching (டாஸ்க் ஸ்விட்சிங்) பணி மாற்றம்: புரோ கிராம் ஒன்றில் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், இன் னொரு புரோகிராமில் இயங் கும் பணியை மேற்கொள்ளும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சூழ் நிலையை இந்த சொற்கள் குறி க்கின்றன. டாஸ் சிஸ்டத்தி லும் இந்த செயல்பாட்டி னை மேற்கொள்ள பல பயன் பாடு புரோகிராம்கள் கிடைக்கின்ற ன. ஒன்றை நினைவில் கொள் ள வேண்டும். இது multitasking என்பதல்ல. multitasking பணி யில், சி.பி.யு. புரோகிராம்களுக் கிடையில், முன்னும் பின்னுமாக இயங்கி, அனைத்து புரோ கிராம்களையும் ஒரே நேரத் தில் இயக்கும். எடுத்துக் கா ட்டாக, இணையத்தில் ஒரு தளத்தினை பார்த்து, அதன் பக்கத்தில் உள்ள தேவை ப்பட்ட டெக்ஸ்ட் டை காப்பி செய்து, அடுத்த பக்கத்திற்கு செல்ல, அதற் கான லிங் க்கில் கிளிக் செய் கிறீர்கள். உடனே, டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றைத் திறந்து, காப்பி செய்த டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்கிறீர்கள். பேஸ்ட் செய்திடும் நேரத்தி ல், உங்கள் பிரவுசர், பார்க்கப் பட்டுக் கொண்டிருக்கும் தளத் தின் அடுத்த பக்கத்தைத் திற க்க முயற்சி எடுத்துத் திற க்கும்.

Task Switching பணியில் சி.பி.யு. முன்னும் பின்னு மாக அடுத்தடுத்த புரோ கிரா ம்களில் இயங்குவதில் லை. ஒரு நேரத்தில்ஒரே ஒரு புரோ கிராமினை மட்டுமே இயக்கும். ஆனால், மாற்றத்தினை மிக அழ காக எடுத்துக் கொடுக்கும். இதனைச் சில வேளைகளில் context switching என்றும் அழைக்கின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: