Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தி.மு.க., உற்சாகம்: ரகசிய சர்வே முடிவால் . . .

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்தப்பட்டதால், கடைசி கட்ட தேர்தல் நட ந்து முடியும் வரை, ஓட்டுப்பதிவுக்கு பின்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூ டாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட் டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங் களுக்கு தேர்தல் முடிந்தும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப் புகள் வெளியாகவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித் துள்ளது யாருக்கு சாதகம் என்ற பெரிய கேள்வி யோடு அரசியல் கட்சியினர், அரசியல் ஆர்வலர் கள், வாக்காளர்கள் என, அனை த்து தரப்பினரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். தேர்தல் கமி ஷன் கட்டுப்பாடு காரணமாக, வெற்றியை முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை என்ற கருத்து, ஓட்டுப்பதிவு முடிந்த ஒரு வாரம், தி.மு.க., பிரமுகர்கள் மத்தியில் நீடித்தது. மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை சார்பாக, ஓட்டுப்பதிவு முடிந்ததும், உடன டியாக எடுக்கப்பட்ட சர்வேக்கள், தி.மு.க.,விற்கு சாதகமாகவே கருத்து தெரிவித்தன. ஆனால், அடுத்தடுத்து வந்த ரிப்போர்ட்டுகள், தி.மு.க., வின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருந்தது. அதே நேரத் தில், கட்சியின் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், தி.மு.க., கூட்டணி, 140 முதல், 160 தொகுதிகளை பிடிக்கும் என்று தலைமையிடம் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து வந்த குழப்பமான கருத்துக்களால், தி.மு.க., தலைமை மேலும் குழம்பியது. ஸ்பெ க்ட்ரம் விவகாரம் ஒரு புறம் நெருக் கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், தேர்தல் முடிவை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று, தி.மு.க., தலைமை நினைத்தது.

இதற்காக, யாரையும் நம்பாமல், தனக்கு நம்பிக்கையான முக்கிய மான, மூத்த நிர்வாகிகள், 10 பேரை ஆய்வுக்காக கள மிறக்கியது. தி.மு.க.,விற்கு சாதகமில் லாத மாவட்டங்கள் என கருதப்பட்ட மாவட்டங்களை விட்டு விட்டு, தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக உள்ள, 10க்கும் மேற் பட்ட மாவட்டங்களில் இந்த நிர்வாகிகள் ரகசிய ஆய்வு மேற் கொண்டனர். வேலூர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், திரு ச்சி, ஈரோடு, சேலம், கன்னி யாகுமரி, மதுரை மற்றும் அதன் அண்மை மாவட் டங்கள், சில என, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இந்த நிர்வாகிகள் களமிறங் கினர். கட்சியின் மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகி களுக்கு கூட தகவல் தெரி விக்காமல், அந்தந்த மாவட் டங்களுக்கு சென்ற இவர்கள், தி.மு.க., வேட் பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர் கள், கட்சியின் முக்கிய நிர் வாகிகள் என, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வரும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சாதக, பாதகமான தொகுதிகள் பட்டியலிடப்பட்டன. இந்த பட் டியலில் உறுதியாக வெற்றி பெறும் தொகுதிகள், இழுபறியில் உள்ள தொகுதிகள், தோல்வி உறுதியான தொகுதிகள் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கான காரணங்களை தெரிவித்து, கட்சித்தலை மையிடம் அறிக்கையாக கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை பார்த் தபின் தான், தலைமைக்கு தெம்பு  தி.மு.க., முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த அறிக் கையின் அடிப்படையில், 135 முதல், 140 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும் என, இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். உறுதிப்படுத்துவது போல், உளவுத்துறை கடைசியாக எடுத்து கொடு த்த ரிப்போர் ட்டில், 130 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு கிடை க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலை க்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பிலும், தி.மு.க.,விற்கு ஆதரவாக கணிப்பு வெளி யாக, தி.மு.க., தலைமை உற்சாகம் அடைந்துள்ளது.தி.மு.க., தலைமை, முக்கிய நிர்வாகிகள் மூலம் மேற்கொண்ட இந்த ரகசிய ஆய்வில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் பலரின் உள்ளடி வேலைகளும், கூட்டணிக் கட்சிகளை தோற்கடிக்க நடந்த குளறுபடிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை தெரிந்து கொண்ட அமைச்சர்கள் பலர், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி வேட் பாளர்களை அழைத்து வந்து, தி.மு.க., தலைவர் முன்னிலையில் நற்சான்றிதழ் கொடுக்கச் செய்துள்ளனர்.”கட்சி தலைமையை திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கோடு, இந்த ஆய்வை மேற் கொண்டவர்கள் ஆய்வறிக்கை கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்த அந்த நிர்வாகிகள் கொடுத்துள்ள அறிக்கை பொய்த்து போகுமானால், அது, அவர்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதால், வெளிப் படையாக உண்மை நிலவரத்தை தெரிவித் துள்ளனர். சோர்ந்து போயிருந்த தலைவரும், முன்னணி நிர் வாகிகளும் இதனால், தெம்பாகி யுள்ளனர்’ என்கிறது அறிவாலய வட்டாரம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்


Leave a Reply