Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கண்டிப்பு: ஒசாமா பின்லாடனுக்கு அடைக்கலம் கொடுத்ததால் . . .

அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனுக்கு, பாகிஸ்தான் அடைக் கலம் கொடுத்த தகவல் அம்ப லமாகியுள்ளதை அடுத்து,  உலக நாடு கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளன. அதிரடி நடவடிக் கையாக, அந் நாட்டில் உள்ள தனது தூதர கம் மற்றும் துணை தூதரக அலுவலகங் களை அமெரிக்கா இழுத்து மூடியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்கள், 2001ல், விமானங்கள் மூலம் மோதி தகர்க்கப்பட்டன. இந்த தாக் குதல் உட்பட, உலக நாடுகள் பலவற்றில் நடந்த  தாக்குதல் களுக்கு காரணமாக இருந்தவர், அல்-குவைதா தலைவர் பின் லாடன். உலகின் பல்வேறு நாடுகளிலும், ஒசாமாவை, அமெரிக்க படைகள் சல்லடை போட்டுத் தேடிவந்தன. இரட்டை கோபுர தாக்குதல் நடந்து, பத்தாண்டுகளுக்கு பின், ஒரு வழியாக, அவர் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்க புலனாய்வுத் துறையினர் கண்டு பிடித்தனர்.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் தான், கடந்த சில மாதங்களாக, ஒசாமா பின்லாடன் பதுங்கி யிருந்தார். கடந்த 1ம் தேதி அதி  காலையில், பின்லாடன் பதுங்கி யிருந்த இடத்தில், அமெரிக்க கமாண்டோ படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இச்  யில், பின்லாடனும், அவருடன் இருந் தவர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். பாகிஸ்தான் அதிகாரி களுக்கு தெரியா மலேயே, இந்த தாக்கு தலை அமெரிக்கப் படை யினர் வெற்றி கரமாக நடத்தி முடித்தனர். அதிபர் ஒபாமா, இதை, “நீதி நிலை நாட்டப் பட்டது’ என்றார்.

பாக்., மீது சந்தேகம்: பின்லாடன் கொல்லப்பட்டதை அடுத்து, அவரைத் தங்க வைத்து ஆதரவு தந்ததாக, பாகிஸ்தான் மீது, உலக நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. “அபோதாபாத்தில் பின் லாடன் தங்கியிரு ந்தது எங்களுக்கு தெரியாது’ என, பாகிஸ்தான் மறுத்தாலும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் மீது, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு ள்ளன.

பின்லாடன் பதுங்கியிருந்த இடத் துக்கு மிக அருகில், பாகிஸ்தான் ராணுவ அகடமியும் உள்ளது. இத்தனை பாதுகாப்பு முக்கியத் துவம் வாய்ந்த இடத்திற்குள், அவர் பதுங்கியிருந்தது, பாகிஸ்தான் , அதன் புலனாய்வு அமைப்பு களுக் கும் எப்படி தெரி யாமல் போனது என்ற சந்தேகத்தை, அமெரிக் காவும்,  மற்ற உலக நாடுகளும் எழுப்பியுள்ளன.

அமெரிக்க புலனாய்வுத் தலைவர் ஜான் ப்ரினான் கூறுகையில், “இஸ்லாமாபாத்திற்கு அருகே, ஒசாமா தங்கியிருந்தது எப்படி? பாக்., அரசு ஆதரவின்றி அது நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இதை நாங்கள் பாகிஸ்தானிடம் கேட்போம்’ என்றிருக்கிறார்.

தூதரகம் மூடல்: தங்களுடைய நெருங்கிய கூட்டாளியாக இருந் தும், தங்களின் முதல் எதிரியான பின்லாடனுக்கு, பாகிஸ் தான் அடைக் கலம் கொடுத்து விட்டதோ என்ற சந்தேகம், அமெரிக்க அதிகாரிகளி டையே எழுந்துள்ளது. இத ன் முதல் கட்டமாக, பாகி ஸ்தானில் செயல் படும் அமெரிக்க தூதரகம் மற் றும் துணை தூதரகங்களை அமெரிக்கா இழுத்து மூடியு ள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் என, அமெரிக்கா கூறி யுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் கசப்பு அதிகரிக்கும். இனிமேல், பாகிஸ் தானுடனான, அமெரி க்காவின் கொள்கைகள், அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு ள்ளதாக, வெள்ளை மாளிகை வட் டாரங்கள் தெரிவிக் கின்றன. இதை வலியுறுத்தும் விதம், அமெ ரிக்க செனட்டர்கள் பலரும், பாகிஸ்தானு க்குத் தரப்படும் நிதி உதவியை நிறுத் தக்கோரி, குரல் எழுப்பத் துவங்கி  .

உலக நாடுகள் கண்டிப்பு: பாகிஸ் தானின் இந்த நடவடிக்கையை, பயங் கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன.

ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் கூறுகையில், “உலக நாடு களால் தேடப்படும் பயங்கரவாதியான பின்லாடன், பாகிஸ் தானின், ராணுவ பாதுகாப்பு மிகுந்த பகுதியில் தங்கிருந்தார் என்ற செய்தி, கவலை அளிக்கிறது. நாம் எதிர்பார்க்காத ஒரு இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பர் என, பயங்கரவாத எதிர்ப்பு படையினர் வழக்கமாக கூறுவர். அது உண்மையாகி யுள்ளது’ என்றார்.

பாக்.,கிற்கு கடும் நெருக்கடி: அமெ ரிக்க தூதரகங்கள் மூடப் பட்டது, உலக நாடுகளின் கண்டனம் என, அனைத்து தரப்பி லிருந்தும், எதிர்ப்பு எழுந்துள் ளதால், பாகிஸ்தான் அரசு க்கு, பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ் தான், பயங்கர வாதிகளின் மையமாக  , ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, பின்லாடன் அங்கு பதுங்கி யிருந்தது, வெளிச்சத்துக்கு வந்ததன் மூலம், ஏற்கனவே கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு, உறுதி செய்யப்பட் டது போல் ஆகி விட்டது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: