Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறந்த நோயாளி திடீரென உயிர்த்தெழுந்த அதிசயம்

சிகிச்சை பலனின்றி நோயாளி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அவரது முகத் தை துணியால் மூட முயன்ற போது நோயாளி திடீரென உயிர் த்தெழுந்தார். உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரி வுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வந்தது.

 நான்கு மணி நேரத்திற்குப் பிற கு அவர் இறந்து விட்டதாக மீண் டும் அறிவிக்கப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் (47). உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 30ம் திகதி வண்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

 நேற்று முன்தினம் காலை அவரது உடல் நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி இற ந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித் தனர். இதைய டுத்து அவரது உடலை மூடி வீட்டுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்தன. அவரது முகத்தை துணியால் மூடும் போது கண்களை திறந்து அவர் எல்லோரையும் பார்த்தார். இதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர்.

 உடனடியாக அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மருத் துவர் கள் அவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை அளித்தனர். நான்கு மணி நேரம் உயிரோடு இருந்த அவர் இறந்து விட்டதாக மீண்டும் அறிவிக் கப்பட்டது. ஆனால், இதுபோன்ற சம்பவம் நடக்கவே இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: