Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒசாமாவை அமெரிக்கா எப்படி கண்டுபிடித்தது? புதிய தகவல்

கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நடந்த, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், பத்து ஆண்டுகளாக அமெரி க்கா இராணுவம் ஒசாமா பின் லேடனை தேடி வந்தது. ஆனால் பிடிக்க முடிய வில்லை. இந்நிலையில் 10 ஆண் டுகளுக்குப் பிறகு அமெரிக்கா, ஒசா மா பின்லேடனை கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் இப்போது வெளி யாகியுள்ளது.

கடந்த 2010ம் வருடம் ஜூலை மா தம், பெஷாவர் அருகே சி.ஐ.ஏ.வுக் காக வேலை பார்த்த அதிகாரிகள், பாகிஸ்தானி ஒருவரின் வெள்ளை நிற காரைப் பின்தொடர்ந்து சென்று கார் பதுவு எண்ணை தெரிந்து கொண்டனர்.

அந்த காரை சி.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாத ங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்த னர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபா த்தில் இருந்து 52 கி.மீ. தூரத்தில் உள்ள அபோ தாபாத் எனும் நகரத்தில், குப்பைகள் நிறைந்த நீளமான ரோட்டையொட்டி, பெரிய பாதுகாப்பு காம்பவுண்டுடன் கூடிய கட்டிடத்தை அடையாளம் கண்டனர். அந்த வீட்டையும் தொடர் ந்து கண்காணித்தனர். அங்கு ஒசாமா தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அபோதா பாத்தில் உள்ள ஒசாமா தங் கியுள்ள வீட்டின் செயற்கை கோள் படங்களை வை த்து ஆராய்ந்தனர். எட்டு மாதங்க ளுக்கு பிறகு, கடந்த திங்கட் கிழமை நள்ளிரவில், நான்கு ஹெலிகாப்டர்களில் 79 அமெ ரிக்க கமோண்டே படை யினர் அந்த வீட்டின் காம்பவு ண்டை சுற்றி வளை த்தனர். துப் பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஒசாமா உள்ளிட்ட ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் விஷயம் பற்றி

osama's house

பாகிஸ் தான் அதிகாரி களுக்கு தகவல் தெரி விக்கப்படவில்லை. இற ந்த ஐந்து பேரில் ஒருவர், உயரமாகவும், பெரிய தாடியுடன் தலையில் குண்டு காயம்பட்டு, ரத் தம் படிந்த உடலுடன் கிடந்தார். அமெரிக்க கப் பல்படையை சேர்ந்த ஒரு வீரர் அவரை படம் பிடித்து, உறுதி செய்வதற்காக அதிகாரிகளுக்கு அனுப் பினார். இந்த தாக்குதலை நடத்துவதற்கு முன், கடந்த ஓரா ண்டாக கிழக்கு ஐரோப்பாவில் உ ள்ள தனிசிறையில் அடைக் கப்பட்டி ருந்த அல்-கொ ய்தா பயங்கரவாதிகளிடம், உளவுத் துறையினர் பல் வேறு விதங்களில் விசா ரணை செய்தனர். இந்த ஆப்பரேஷன் வெற்றியில் முடியுமா அல்லது ஆபத் தை உண்டாக் குமா என சி.ஐ.ஏ. அதிகாரிகள் பல கோணங்களில் ஆராய்ந்தனர். தாக்கு தலை நடத்துவது குறித்து வெள்ளை மாளிகை அதிகா ரிகள் இடையே வெவ்வெறு விதமா ன கருத்துகள் நிலவின. இன் னும் சிறிது காலம் காத்திருந்து உண்மையிலே ஒசாமா அங்கு தான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள் ளலாம் அல்லது குண்டு போட்டு தாக் குதல் நடத்தலாம் என இரு வேறு கருத்துகள் நிலவின. குண்டு போடும் திட்டத்தை ஒபாமா ஏற்க வில்லை. இத னால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒபாமா கருதினார். இறுதியாக நேரடி தாக்குதல் நடத்த முடிவு செய்யப் பட்டது. இரண்டு ஹெலி காப்டர் முன்னாடி செல்ல, பாது காப்புக்கு பின்தொட ர்ந்து இரண்டு ஹெலிகாப் டர்கள் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அமெரிக்க நேரப்படி ஞாயி ற்றுக் கிழ மை பிற்பகலில் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் அதிபர் ஒபாமா, அவரது ஆலோசகர், ஹிலாரி கிளின்டன், பாது காப்பு தலைமை அதிகாரிகள் ஆகியோர், தாக்குதல் நிலவரத் தை திரையில் உன்னிப்பாக கவ னித்து கொண்டிருந்தனர். ஒபா மா இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருந்தார். பெரும் பாலான நேரம் அறை அமை தியாகவே இருந்தது. ஒவ் வொரு நிமிடமும், நாட் கள் போல நகர்ந்தன என வெள் ளை மாளிகை தலைவர் ஜான் பிரன்னன் தெரிவி த்தார். சி.ஐ.ஏ. தலைமைய கத்தில் இருந்து அதன் இயக்குநர் பெனாட்டா, பாகிஸ்தானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வீடியோ ஸ்கீரின் மூலம் அதிபருக்கு தெரிவி த்துக் கொண்டிருந்தார். இறுதியாக, “அவனை கொன்று விட்டோம்’ என அதிபர் ஒபாமா கூறியதும் அறையில் இருந்தவர்கள், ஆர வாரம் செய்தனர். உலகில் அதி கம் எதிர்பார்க்கப்பட்ட “ஆபரே ஷன்’ முடிவுக்கு வந்தது. உலகி லேயே அதிக பொருட் செலவில் நடந்த ஒசாமா தேடல் வேட்டை முடிவுக்கு வந்தது. அமெரிக் காவின் முதல் எதிரியான ஒசாமா வின் உடல் ஹெலி காப்டரில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது. 10 ஆண் டுகள் அமெரிக்க உளவுத்துறையின் திட்ட ங்கள் தோல்வியில் முடிந்தாலும் இறுதியாக வெற்றி கிடைத் தது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: