Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய டேப்ளட் பிசி, பட்ஜெட் விலையில் . . .

டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியா வில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடு த்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறு வனம் அண்மையில் மூன் று புதிய “Me” டேப்ளட் பிசி க்களை விற்பனைக்கு அறி முகப்படுத்தியுள்ளது. இவற் றின் வி லை ரூ.14,990 லிரு ந்து ரூ.32,990 வரை உள் ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப் ளட் பிசி இருப்பதால், இத னை வாங்கிப் பரீட்சார்த்த மாகப் பயன்படுத்த எண்ணுபவர் கள் தயக்கமின்றி வாங்க எண்ணுவார்கள்.

இவற்றில் விலை குறைந்தது HCL Me AE7A1 என்ற டேப்ளட் பிசி ஆகும். ஏழு அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், 800 x 480 பிக் ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டு ள்ளது. ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரை யோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்ப டுகிறது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. இதன் பிளாஷ் மெமரி 2 ஜிபி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் போ ர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளு டூத், 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.எஸ். ரிசீவர், 2400 mAh திறன் உள்ள பேட்டரி. 3.5 மிமீ ஆடியோ ஸ்டீரீயோ ஜாக் ஆகியன உள்ளன. மெமரியினை 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் எடை 400 கிராம் மட்டுமே.

மேலே சொல்லப்பட்ட மூன்றில், சிறந்தது எனப் பலராலும் கருதப் படுவது HCL Me AM7A1 டேப்ளட் பிசியாகும். கேலக்ஸி டேப் டேப் ளட் பிசியின் விலையை ஒட்டி ரூ.22,990 என இது விலையிடப் பட்டுள்ளது. ஏழு அங்குல கெபா சிடிவ் டச் ஸ்கிரீன் 1024 x 600 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள் ளது. 800 மெஹா ஹெர் ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் செயல் படுகி றது. இதன் உள் நினைவகம் 512 எம்பி ராம். 8 ஜிபி கொள்ளளவு உள்ளது. மைக் ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண் ட்ராய்ட் ப்ரையோ 2.2 இயங்குகிறது. ஹை டெபனிஷன் வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது. இதன் பேட் டரி திறன் 4200 mAh.

HCL Me AP10A1 டேப்ளட் பிசி, இந்த மூன்றில் விலை கூடுதலா னதும், பெரிய அளவிலானதுமாகும். 10 அங்குல கெபா சிடிவ் டச் ஸ்கிரீன் திரை உள்ளது. இதில் இயங்கும் Cortex A9 ப்ராசசர் 1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல் படுகிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. உள் கொள்ளளவும் 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் சப்போர்ட்டும் கிடைக் கிறது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட் டுள்ளது. 3650 mAh திறன் உள்ள பேட்டரி அதிக நேரம் பவர் தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ. இதன் அதிக பட்ச விலை ரூ.32,990. இவற்றை http://www.hclstore.in/ME_tablet என்ற முகவரியில் இயங்கும் இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: