Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அரிதாரம் பூசுதல் – விடாது கறுப்பு மஞ்சிட்டி

நமக்கு அழகை கூட்டிக் காட்டுவது நமது முகமே. முகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மனதின் போக்கை காட்டி விடும். மன்னர் ஆட்சி காலத்திலிருந்தே பலவகையான முகப் பூச்சுகளும், களிம்பு களும் வழக்கத்தில் இருந்து வந்தன. வெயி லிலும், கடும் சூட்டை தரக் கூடிய வெளிச்சத்திலும் பணிபுரியும் நாடக நடிகர்கள் கூட, முகத்தில் வெப்பத் தாக்குதலை தணிக்க, முகப்பூச்சுகளை பூசிக் கொள்வ துண்டு. இதை “அரிதாரம் பூசுதல்’ என்று கூறுவது வழக்கம்.

அரிதாரம் என்னும் சித்த மருந்தின் மஞ்சள் நிறத்தை போன்றே முகப்பூச்சு காணப்படுவதால், முக சாயப்பொடியை அரிதாரம் என்று இன்றும் கூறுகின்றனர். நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் ரோமத்திற்கு கறுப்பு நிறத்தைக் கொ டுப்பதுடன், கடுமையான பாதிப்பை யும் உண்டாக்குகின்றன. இவை மட்டு மின்றி சூரிய ஒளியிலுள்ள புறஊதாக் கதிர்களின் கடுமையான தாக்குதல் கூட முகம், கழுத்து மற்றும் கைகளை பாதிக்கின்றன. கோடை காலத்தில் வெயிலின் தாக்குதலால் கூட முகம், கை, கால்களில் கறுப்பு நிறம் உண்டா கிறது. மாதவிலக்கு முதிர்வு காலங் களில் முகம், கழுத்து போன்ற பகுதி களிலுள்ள வியர்வை மற்றும் கொழு ப்பு கோளங்களில் அடைப்பு ஏற்படுவதாலும், ஹார்மோன்களின் மாற்றத்தாலும் முகத்தில் நிறமாற்றம் ஏற்படுகிறது.

இந்த நிறமாற்றமானது சிவப்பு நிற தோலுடையவர்களுக்கு நன்கு சிவந்தும், மாநிறமானவர் களுக்கு கறுத்தும் காணப் படுகிறது. கவலையின் அறிகுறியாகவும் முது மையின் அடையாளமாகவும், முகத் தின் கறுப்பு காணப்படுகிறது.

இதை வங்கு என்றும் மங்கு என்றும் நாட்டுப்புறங்களில் அழைக்கி ன்றனர். இவை தவிர, நீண்ட நேரம் கணினியை பார்ப்பதாலும், “டிவி’ பார்ப்பதாலும், மங்கிய வெளிச்சத்தில் புத்தகம் படிப் பதாலும் நீண்ட நேரம் இரவில் கண் விழிப்பதாலும் கண் களைச் சுற்றி கரு வளையம் உண்டாகிறது. ஒவ்வாத மருந்துகள், முடி மற்றும் முகசாய அலர்சி, ஹார்மோன் மாத்திரைகள், வீரியமிக்க களிம்புகள், பிளாஸ்திரிகள், புறஊதாக் கதிர்வீச்சு, எக்ஸ்-ரே, புற்றுநோய்

cancer

சிகிச்சைக்கு தேவைப்படும் கதிர்வீச்சு, நாட்பட்ட சர்க்கரை நோய், கடுமையான பூஞ்சை தொற்று, தோல் வறட்சி, உடலில் நீர்ச்சத்து வற்றிப்போதல் மற்றும் பாரம்பரியம் காரணமாக முகத்தில் கறுப்பு மற்றும் வங்கு உண்டாகலாம்.

தோலில் தோன்றும் எந்த வகையான கறுப்பு நிறமா ற்றம் மற்றும் கரும் புள்ளி களை நீக்கி, தோலுக்கு மினு மினுப்பையும், பளபளப் பையும் தரும் அற்புத மூலிகை மஞ்சிட்டி. ரூபியா கார்டி போலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூபியேசியே குடும்ப த்தைச் சார்ந்த இந்த கொடிகளின் வேர் தோல் நோய் களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் வேரிலுள்ள ஆன்த்ரோ குயி னோன்கள், பர்பியூரின், ஜான்தோ பர்பியூரின், மஞ்சிஸ் டின் மற்றும் அலிசானின் கூட்டுப் பொருட்கள் தோலில் தோன்றும் அதிகப்படி யான வளர்ச்சி மற்றும் செல்களி ன் முதிர்வை தடுத்து, தோலு க்கு இயற்கையான நிறத்தை அளிக்கி ன்றன.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மஞ்சிட்டி வேரை வாங்கி, ஒன்றிரண்டாக இடித்து, நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பெரும்பகுதி சுண்டியதும் வடி கட்டி, வெயிலில் காய வைத்து, மெழுகு பதத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

இதை தேன் அல்லது தேன்மெழுகு சேர்த்து முகத்தில் கறுப்பு நிறமுள்ள இடங்களில் தடவி வர, குணம் உண்டாகும். 10 கிராம் மஞ்சிட்டி வே ரை 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 125 மி.லி.,யாக சுண்டியபின் வடிகட்டி, தினமும் ஒரு வேளை குடித்துவர விரைவில் கறுப்பு நிறம் மாறும். மஞ்சிட்டி கசாயம், புங்கு இலைச்சாறு, புளியம்பட்டை கசாயம், கற்றாழைச்சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்து, கால் பங்கு நல்லெ ண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து, நீர்சத்து வற்றியதும் பதத்தில் வடி கட்டி, தேன்மெழுகு சேர்த்து களிம் பாக செய்து வைத்து கொள்ள வேண் டும். இதை முகம், கழுத்து, கை போன்ற இடங்களிலுள்ள கருமை யான இடங்களில் தடவிவர குணம் உண்டாகும். சித்த மருந்து கடைக ளில் கிடைக்கும் மஞ்சிட்டாதி கசா யம், 10 மி.லி., காலை உணவுக்கு முன் குடித்து வந்தாலும், முகத்தில் தோன்றும் கறுப்பு நிறமாற்றம் நீங்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: