Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நல்ல காலம் பொறக்குது. . . நல்ல காலம் பொறக்குது. . .

மே 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

நம் தேசத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற சில முயற்சிக ளைப் பார்க்கும்போது பெருமை யாகவு ம், மகிழ்ச்சியாகவும் இருக்கி றது. புற்று நோயைவிட வேகமாகப் பரவிவரும் ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்த்து தேசமெங்கும் புறப்பட்டிருக்கிற எழுச்சி. . . அதிலும் இளைய சமுதாயத்திடம் ஏற்ப ட்டிருக்கும் எழுச்சி ஆங்கில ஆதிக்கத் தை எதிர்த்து கிளம்பியதைவிட பெரியதாய் தெரிகிறது.

அண்ணாஅசாரே உண்ணாவிரதத்தை ஆதரித்து, சில மணிநேரத் திற்குள்ளேயே தேசமெங்கும் புயல்வேகத்தில் குறுந்தகவல்கள் பறந்தன•  பேரணிகள் சாலைகளைக் குலுக்கின•… அவரது கோரி க்கைகளை அரசு ஏற்றிருப்பது காந்திய வழிக்கு கிடைத்திருக்கிற இன்னொரு வெற்றி.

அதேபோல் அலைவரிசை ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட பொது கணக்குக் குழுவிற்குகட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இரண் டாவது முறையாக முரளி மனோகர் ஜோஷி தலைவராகியிருப் பது… தவறுகளை மூடி மறைக்கிற, தவறுகளுக்கு துணை செல் கின்ற மத்திய அரசுக்கு கிடைத் திருக்கிற சவுக்கடி என்பதை விட மக்கள் மன்றத்திற்கு கிடைத்துள்ள மரியாதை என்றே தோன்றுகி றது.

தேர்தல் திருவிழாவில் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் நடத்துகிற கூத்துகளுக்கெல்லாம், தேர்தல் ஆணையம் ஆப்பு வைத்திருக்கிறது.

நீதியை நிதியால் வாங்க முடியும்… சட்டத் தை தன் சட்டைப் பை யில் போட்டுக் கொள்ள முடியும் என்கிற அரசியல் அரிச்சு வடி தற்போது மாற்றி எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.

ஏழையின் நியாயம் தவறாகும்… ஆனால் பணக்காரனின் தவறு நியாயமாகும் இதுதான் இந்தியா. இந்த கோட்பாட்டை மாற்றி க்காட்டும் வகையில் தவறு செய் கிறவர்கள் “கல்மாடி” யானா லும், ராசாவானாலும் ஏன் “மன்னனின் மகளாக” இருந்தாலும், நீதிக்கு முன் நின்றாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

த‌வறுகளைத் தோலுரிக்கின்ற ஊடகங்களையும் கடமையைச் சரி யாய்ச் செய்கிற அதிகாரிகளையும் அநீதி தோன்றுகிற போதெல் லாம் அதிலிருந்து மக்களை காப்பாற்ற நானிருப்பேன் என்கிற பகவத் கீதை கிருஷ்ணனாக காட்சியளிக்கும் உச்சநீதி மன்றத்தின் நடவ டிக்கைகளைப் பார்க்கும்போதும், நல்ல காலம் பொறக் குது… நல்ல காலம் பொறக்குது… என்று உற்சாகமாய் குரல் கொடுக்கத் தோன்றுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: