Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி ரேகா முதல் இடம்

பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல்‌ ரேங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட் ரிக் மேல நிலைப் பள்ளி மாணவியான இவர் ஆயி ரத்து 190 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கே சவன். தனியார் நிறுவன த்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடு நிலைப் பள்ளி ஆசிரிய ராக பணியாற்றுகிறார். ரேகா வின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் – 195; கணிதம் – 200; இயற்பியல் – 200; வேதியியல் – 200, உயிரியல் – 200.

விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்: விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மார்க்குகள் பெற்று இரண்டா மிடத்தை பெற்றுள்ளார்.

3 வது இடத்தை பிடித்த 4 பேர் : வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கனவு நனவானது : மாணவி ரேகா பேட்டி
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஓசூர் விஜய வித்யாலயா பள்ளி மாணவி ரேகா அளித்த பேட்டியில் : தனது கனவு நனவானதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பெற்றோர்கள் மற்றும் சகோதரி அளித்த ஊக்கமும் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளி யிடப்படுகிறது. மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை, “தினமலர்’ இணையதளத்தில் மாணவர்கள் உடனடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன. இத்தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதலிடம் பெற்ற மாணவர் களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்ற வர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப் படுகிறது. மாணவ ர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளி களிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப் படும்.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதிய வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங் களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்பு பவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச் சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவல கங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண் ணப்பங்கள் பெறலாம்.விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப் பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: