மாரடைப்பு என்பது ரத்தக்குழாய் நோய். உடலில் உள்ள ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்தி ருந்தாலே, கொடூர ரத்தக் குழாய் நோய் களான பக்கவாதம், மாரடைப்பு, சிறு நீரக கோளாறு போன்றவற்றை தடுக்க லாம். தற்போதுள்ள நவீன மருத்துவ த்தில், உங்கள் உண்மையான வயதை விட, ரத்தக் குழாயின் வயதே (வாஸ் குலர் ஏஜ்) முக்கியத்துவம் பெறுகிறது. ரத்தக்குழாய் நோய்க்கு வாழ்க்கை முறை மாற்றமே அத்தி யாவசி யமா னது. குறிப்பாக மனதை நிம்மதி யாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி, சரியான அளவு ஓய்வு ஆகிய வை முக்கியமானவை. உணவுப் பழக்க த்தை பொறுத்தவரை, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது அவசியம். உப்பு, சர்க்கரையை நன்கு குறைக்க வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் உண்பது, அரிசி உணவை குறைப்பது, நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்ப்பது ஆகியவை முக்கியம். இந்த பழக்கங்களை கடைபிடித்தால் பெரு மளவு ரத்தக்குழாய் நோய்களை தடுக்கலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்