Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

+2 மதிப்பெண் பட்டியல்: மே 25 முதல் . . .

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 25ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது.

விடைத்தாள் நகல், மறு கூட்டல் செய் வதற்கான தேதிகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. இது குறித்து, தேர்வுத் துறை வெளி யிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு ள்ளதாவது, “கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுதினம் (9ம் தேதி) காலை வெளியிடப் படுகிறது. இதற்கான மதிப்பெண் பட்டியல் களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், மாண வர்கள் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப் பங்கள், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும்.

விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய, மொழிப்பாட தேர்வுகள், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண் டும். மாணவர்கள், மறு மதிப்பீடு செய்ய விரும்பினால் விடைத் தாள் நகல் பெற்ற ஐந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொழிப்பாடங்களுக்கு (இரு தாள்கள்) 1,010 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 505 ரூபாய் வீத மும் கட்டணம் செலுத்த வேண்டும்.

உடனடித்தேர்வு: பொதுத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங் கள் வரை தோல்வியடையும் மாணவர்கள், ஜூன் – ஜூலையில் நடக்கும் உடனடித்தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு, ஜூன் 22ம் தேதி முதல், ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும். ஒரு பாடத்திற்கு 85 ரூபாய், இரு பாடங்களுக்கு 135 ரூபாய், மூன்று பாடங்களாக இருந் தால் 185 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான விண்ண ப்பங்கள் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும்.

பள்ளிகள் மூலமாக தேர்வெழுதிய மாணவர்கள், அந்தந்த பள் ளிகள் மூலமாகவே விண்ணப்பங்களை பெற்று, பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். மூன்று பாடங்கள் வரை தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கு, வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப் படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் 24ம் தேதிக் குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்” என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: