சில வேளைகளில் நீங்கள் உங்களுடைய இயலுமைக்கேற்ப வே லைகளை செய்து முடிப்பீர்கள். ஆனால், மற்றவர்கள் அதை நோக்குகின்ற விதம் சரியானதாக இராது. நீங்கள் வேலைத் தளத் தில் இருக்கும் பொழுது எல்லாவற்றையுமே சுமூகமாக செய்து முடிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. காரணம், அந்த கம்பனியுடைய எதிர்காலத்தில் நீங்க ளும் பொறுப்புடைய வராக இருப்பது தான். எனவே, உங்களுடைய வார்த்தை கள் வேலையில் தாக்கங்களை ஏற்படு த்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். பண்பாடற்ற இமெயில்கள் எவற்றையும் கண்டதும் உடனே பதில் அனுப் பாமல் பொறுமையாக அமர்ந்து முதலில் அதை நன்றாக வாசித் துப் பாருங்கள்.
உடனடியாக பதிலளிக்காதீர்கள்
உடனடியாக பதிலளிக்க வேண்டிய இமெயில்கள் இல்லையென் றால் அவற்றை அடுத்த நாளுக்கு தள்ளிப் போடுங்கள். அந்த விட யம் தொடர்பாக உரிய மு றையில் நீங்கள் தொழில் ரீதியாக எவ்வாறு பதிலளி ப்பது என்பது குறித்து சிந் தியுங்கள். நீங்கள் என்ன செ ய்வதாக இருந்தாலும் உடன டியாக மறுமொழி செய்யா தீர்கள். நீங்கள் சில வேளை ஆத்திரப்பட்டு எரிகின்ற நெ ருப்பில் எண்ணெய்யை ஊற் றிவிடக்கூடும். எனவே அந்த இமெயிலுக்கு பதிலளிப் பதை அடு த்த நாளைக்கு தள்ளிப்போட்டு வைத்துவிட்டு அமைதியாக இரு ங்கள்.
அமைதியாக ஆரம்பியுங்கள்
ஒரு கொடூரமான இமெயில் ஒன்றினை உங்களுக்கு யாராவது அனுப்பி வைத்திரு ந்தால் உடனடியாக அவர்களுக்கு மறுமொ ழியனுப்பிவிடாதீர்கள். பொறுமையாக இருங்கள். சிலவேளை ‘உங்கள் தகவலு க்கு நன்றி’ என அனுப்பி வைத்துவிட்டு இருந் துவிட்டால் நீங்கள் அவர்களது கருத் துக்கு மதிப்பளிக்கின்றீர்கள் என்று காட்டி க்கொள் ள முடியும்.
தீர்வளித்தல்
சிலவேளைகளில் நீங்கள் ‘உங்கள் தகவலுக்கு நன்றி. சிறிது நேரத்தின் பின் உங்களைத் தொ டர்பு கொள்கிறேன்’ என்று தெரி விப்பது மிகச் சரியான செயற் பாடாக இருக்க முடியும். ஆனால், நீங்கள் ஒரு மோசமான அல்லது வஞ்சகமான இமெயில் ஒன்றி ற்கு பதிலளிக்கும்போது அது உட ன் பணிபரிவோரிடமிருந்து வந்தி ருந்தாலோ அல்லது வாடிக்கை யாளர்களிடமிருந்து வந்திருந்தா லோ முதலில் நீங்கள் கனிவாய் பதிலளிக்க வேண்டும்.
அந்த நபர் குறித்த செயற்பாடு பற்றி கவலையடைந்திருப்பதை நீங்கள் புரிந்துகொள்வதாக முதலில் தெரிவி த்து விட்டு பின்னர் உங்கள் திட்டத்தின் நோ க்கம் பற்றி தெரிவிக்கலாம். உதாரணமாக: ‘எமது இந்த புதிய திட்டத்துடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை அறியும்போது கவலையடைகிறேன். ஆனால், எமது இலக்கு எல்லா நிறுவனங்களுக்கும் உதவி செய்வது தான்’ என்று தெரிவிக்க முடியும்.
நீங்களும் அவருக்கு முரட்டுத்தனமாக பதிலளிக்க விரும்பக் கூடும். ஆனால், அது தொழில் நெறிக்கு அழகல்ல.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்