Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும்…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என் னென்னவோ செய்தும் இந்த பெண் களை எளிதில் கவர முடியவில் லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடு கின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வி யிலேயே முடிகிறது.

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்க ளை மனதை கவருவது எப் படி என்பது குறித்து உங்க ளுக்காக சில யோசனை கள்:

கவர முயற்சிக்க வேண் டாம்

இது என்ன விளையாட்டு ? என்று ஏராளமானோர் கேட்பது காதில் விழுகிறது. நிஜமாகவே இது உண்மைதான். நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய் தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட் டம்தான். பெண்கள் விசயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம்தான். இதுதான் பெண் களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கை களில் ஈடுபட்டு பெண்களிடை யே வெறுப்பை சம்பாதிக் கின்றனர்.

புத்திசாலித்தனத்தை நிரூபியு ங்கள்

பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத் தால் பெண் களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண் களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத் தின் மீதுதான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண் மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப் ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

புதிதாக சிந்தியுங்கள்

பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதை யெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணி யை பின்பற்றி முயற்சி செய்தால் கதை க்கு உதவாது!. எனவே இயல்பாக இரு ந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவ வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்பு களை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

தோற்றம் முக்கியம்

என்னதான் புத்திசாலியாக இருந் தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம், போன்றவை யும் ஆண்க ளைப்பற்றி பெண்களிடை யே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல் பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங் காரமோ, செயல்பாடுகளோ தேவை யில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப் படுத்துங்கள். அத்தகைய ஆண்களை த்தான் பெண்களுக்கு மிகவும் பிடி க்கும்.

பெண்களின் மன ஆழம்

பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறி ஞர்களும், ஞானிகளும் கூட இந்த விசயத்தில் தோற்றுத் தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண் கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். என் னதான் பெண்களுக்குப் பிடிக்கும் ? என்று குழம்பித்தான் போகி ன்றனர் ஆண்கள். இன்றைய 21-ம் நூற்றாண்டு இளைஞர்க ளிடையும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண் களின் உள்ளம் கவர் கள்வன் ஆவது நிச்சயம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் ரசித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: