Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒப்பேரா பதிப்பு 11.10

புதிய பதிப்பின் ரிலீஸ் பதிப்பு வெளியாகிச் சில நாட்களிலேயே, முழு மையான பதிப்பை வெளி யிடுவது ஆப்பராவின் வாடிக்கை யாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதேபோல் வெளியி ட்டுள்ளது. நான் கு ரிலீஸ் பதிப்பு வெளியானவு டன், முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. ஆப் பராவின் இணையதளத்திலி ருந்து இதனைத் தரவிறக்கம் செ ய்து கொள் ளலாம்.

தரவிறக்கம் செய்த கோப்பினைக் கம்ப்யூட்டரில் பதிப்பது மிக எளிதான ஒரு வேலையாக உள்ளது. கையில் எடுத்துச் சென்று, மற்ற கம்ப் யூட்டர்களில் பணியாற்ற, போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் கிடைக் கிறது. கம்ப்யூட்டரில் பதிந்தவுடன், என்ன சிறப்பு வசதிகள் புதுமையாகக் கிடைக்கின்றன என்று பட்டியலிடப் படுகி றது. ஸ்பீட் டயல் திருத்தி அமைக்கப்பட்டு வேகமாக இயங்கு கிறது. இதனை Speed Dial 2.0 என ஆப்பரா அழைக்கிறது. இதற்கு முன் இருந்த ஸ்பீட் டயல் வசதியில் இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப் பட்டுள்ளன. இந்த ஸ்பீட் டயல் பக்கத்தில், எத்தனை இணை ய தளங்களை வேண்டு மானாலும் இணைக் கலாம்.

பிரவுசருக்கான ப்ளக் இன் தொகுப்புகள் இல்லை எனில், அவற்றை எளிதாக இதில் பதிக் கலாம். இப்போதைக்கு அடோப் பிளாஷ் பிளேயர் சப்போர்ட் செய்யப்படுகிறது. மேலும் பல புரோகிராம்கள் இணைக்கப் பட லாம். பிளாஷ் பிளேயர், கம்ப்யூட்டரில் இல்லை என்றால், அத னைப் பதிக்கக் கூறும் செய்தியும், தளத்திற்கான லிங்க்கும் தரப் படுகிறது.

ஆப்பராவின் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனா ளருக்கு தகவல்களை அனுப்பும் முன், ஆப் பரா சர்வரில் அவை கம்ப்ரஸ் செய்யப்படு கின்றன. இதன் மூலம் தரவி றக்கம் செய்வது தொடர்ந்தும் வேக மாகவும் நடைபெறு கிறது.

ஆப்பரா பிரவுசரின் இந்த புதிய பதிப்பினைத் தரவிறக்கம் செய்திட விரும்புவோர் http://www.opera.com/browser/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

இன்னொரு முக்கிய தகவலையும் இங்கு சொல்லியாக வேண்டும். ஆப்பரா இப்போது வெப் இமெயில் சேவையினைத் தருகிறது. இது அனைவருக்கும் இலவசமே. இது My Opera Mail என அழைக்கப் படுகிறது.  பயன்படுத்திப் பாருங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: