Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொகுசு கார்கள் விலை உயரும்?

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் வெளிநாட்டு சொகுசு கார் களுக்கான சுங்கத் தீர்வை யை (இறக்குமதி வரி) மத்திய அரசு 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அண்மையில் உயர் த்தியது. சொகுசு கார்கள் விலை உயர்வுக்கு இதுவே முக் கிய காரணமாகும்.

இறக்குமதி வரி விதிப்பு அதி கரிப்பால், சொகுசு கார்கள் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத் தின் நிர்வாக இயக்குனர் பீட்டர் ஹோனெக் தெரிவித்தார்.

இந்நிறுவனம், உயர் வகை எஸ் கிளாஸ் செடன் கார் விலையை ரூ.8 லட்சம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த காரின் விலை மாட லைப் பொறுத்து ரூ.84.34 லட்சத்தி லிருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான விலையில் விற் பனை செய்யப்படுகிறது.

ஆடி, பீ.எம்.டபிள்யூ. மற்றும் லேண்டு ரோவர் ஆகிய நிறு வனங்களால் தயாரிக்கப்படு ம் சொகுசு கார் ஒன்றின் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.90 லட் சம் வரை உள்ளது. இந்த நிறுவனங் களும் இந்தியாவில் ஒருங்கி ணைக்கப்படும் சொகுசு கார்கள் விலையை உயர் த்த திட்டமிட் டுள்ளது.

2010-11ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை அதற் கு முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரி த்து 15,000 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், சுங்கவரி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை யடுத்து, நடப்பு நிதி ஆண்டில் சொகுசு கார்கள் விற்பனையில் வளர்ச்சி குறையும் என தொழில் வல்லுனர்கள் தெரிவித்துள்ள னர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் ரசித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: