Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம்.

1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த புளுடூத் 2.0, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,999.

2. LG P520: மேலே தரப்பட்டுள்ள மொபைல் போலவே அம்சங் களை உடையது இந்த போன். இ தில் ட்விட்டர் மற்றும் ஆர்குட் விட் ஜெட்டுகள் ஹோம் ஸ்கிரீனில் தரப்பட்டுள்ளன. இவற் றின் மூலம் இந்த தளங்களுக்கு எளிதாகச் செல் லலாம். இது ஒரு இரண்டு சிம் இயக்க போன். 2.8 அங்குல ரெசி ஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த புளுடூத் 2.0, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதிகள் தரப்பட் டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999.

3. LG T325: இது ஒரு 3ஜி போன். முன்பக்கமாக கேமராவுடன், எல்ஜி மொபி காமிக்ஸ் மற் றும் ஸேப் பாக்ஸ் (Zap Box) தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடல் களை டவுண்லோட் செய்வது எளிது. இதில் விண்டோஸ் லைவ் மற்றும் யாஹூ மெசஞ்சர் அப்ளி கேஷன் கள் தரப்பட்டுள்ளன. 2.8 அங்குல தொடுதிரை, 3ஜி மற்றும் வை-பி, புளுடூத், முன்புறம் வைக்கப்பட்டுள்ள 2 மெகா பிக்ஸெல் கேமரா, 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியன உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: