Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே உஷார்!

பெண்களே உஷார்! எந்த நேரத்திலும் நீங்கள் டேட் ரேப் (Date Rape) செய்யப்படலாம்.

அதென்ன டேட் ரேப் ? மயக்க நிலையில் பாலியல் வன்முறை செய்வதைத் தான் “டேட் ரேப்” என்கிறார்கள்.

தெரிந்த பெண்களை வசீகர மாய்ப் பேசி ஹோட்டலு க்கோ, தனிமையான இடங் களுக்கோ அழைத்துச் செல் ல வேண்டியது. அவர்கள் குடிக்கும் பானத்தில் டேட் ரேப் ஸ்பெஷல் மருந்தைக் கலக்க வேண்டியது. அவர்கள் மயங்கிச் சாயும் நேரத்தில் அவர்களை பலாத்காரம் செய்யவேண்டியது. இதுதான் டேட் ரேப்பின் அடிப்படை.

மது அருந்தும் பெண்களென்றால் ஆண்களுக்கு வேலை சுலப மாகி விடுகிறது. பெண்களைக் கட் டாயப்படுத்தியோ, வசீகரமாய்ப் பேசியோ அதிகம் மதுவை அருந்த வைத்து அவர்களை மயக்க நிலைக்குக் கொண்டு சென்று தங் கள் விருப்பத்தை நிறை வேற்றி விடுவார்கள்.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், என்ன நடந்தது என்பது மறு நாள் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எதுவும் நினைவில் இருக் காது. “நீ தான் என்னைக் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் சொன் னே !” என ஆண் குற்றம் சாட்டினால் மறுத்துப் பேசவும் முடியாது. “ஒருவேளை அப்படி இருந் திருக்கலாமோ?“ என்று தான் நினைக் கத் தோன்றும்.

“என்னால தான் இப்படியெல்லாம் நடந் திருக்கு. இது என்னோட தப்பு… இதுல பேச என்ன இருக்கு” என அமைதியு டனும், வலியுடனும் பெண்கள் முட ங்கி விடுவார்கள். !

பதினேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட பெ ண்கள் தான் இதில் ரொம்பவே பாதிக்கப்படு கிறார்கள் என்கி றது இங்கிலாந்தில் வெளி யான ஆய்வு முடிவு ஒன்று. பெரும்பாலான டேட் ரேப் கள், காத லன், பழைய காதலன், நண்பன், உடன் வேலை செய்பவர், கொஞ்சம் அறிமுக மானவர் இப்படிப் பட்டவர் களால் தான் நடக்கிறதாம்.

“அவளோட ஆடையே ரொம்ப செக் ஸியா இருந்துச்சு, என்னை வா, வா ன்னு வலியக் கூப்பிடுவது போல இருந்தது” என்பன போன்ற சால் ஜாப் புகள் அடிக்கடி ஆண்களிடமிருந்து எழும். ஒருவருடைய விருப்பம் இல்லாமலும், முழு உணர்வு இல்லா மலும் நடக்கும் எந்த உற வும் பலாத்காரம் தான். செக் ஸி ஆடை அணி வது அவரவர் விருப்பம். அது பாலியலுக்கான அழை ப்பு என ஆண்கள் தவறாக அர்த்தம் கற்பிப்பது அவர்க ளுடைய அறியாமை மட் டுமே.

டேட் ரேப் குற்றத்தில் பயன்படும் எக்கச் சக்க மாத்திரைகள் உள் ளன. இந்த மாத்திரைகளில் சுவையோ, மணமோ, நிறமோ எது வும் இருக்காது. ஆனால் வீரியமாய்ச் செயல்படும். அத்தகைய மருந்துகளில் மிக மிக முக்கியமானவை இவை.

ரோஹினால், ஃபுலண்ட்ரீஸிபம் எனும் வகையைச் சேர்ந்த மருந்து இது. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட இந்த மருந்து இங்கிலாந்து, மெக்ஸி கோ போன்ற நாடுகளில் தாராளமாய்க் கிடைக்கிறது. இன்னொரு மருந்து ஜி.ஹை.பி என சுருக்கமாய் அழைக்க ப்படும் காமா ஹைட்ராக்ஸி பட்ரிக் அமிலம் கலந்த மருந்துகள். மூன்றா வது ஜி பி எல் என அழைக்கப்படும் காமா புடிரெலக்டோன் !

இந்த மருந்துகள் பல வடிவங்களில், பல பெயர்களில் இந்தியா வில் வெகு சாதாரணமாகக் கிடைக்கி ன்ற ன என்பது திகிலூட்டும் உண்மை யாகும். மாத்திரைகளைப் போலவே எக்ஸ்டஸி போன்ற சில பானங்களும் உள்ளன. இவை யும் குடித்தால் குடிப்பவரை அப்படியே அலேக்காக மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும்.

மயக்கத்துடன் கொஞ்சம் செக்ஸ் உணர்வையும் இந்த மருந்துகள் தூண்டி விடுகின்றன. அதனால் மது விலோ, குளிர்பானத்திலோ, ஏன் தண் ணீரிலோ கூட இதைக் கலந்து கொடுத் தால் விஷயம் முடிந்து விட்டது !. குடிப் பவருக்கு முடிவெடுக்கும் திறமை முழு மையாய் போய் விடும். ஒருவித பரவச மயக்கத்துக்குள் செல்வார்கள். எதிராளி யின் விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும், ஒத்துழைப்பதும் ஒரு அடிமை நிலையில் நடந்தேறும்.

பெரும்பாலும் இத்தகைய மருந்துகள் பார்களிலும், இரவு விடுதிகளிலும் எக்கச் சக்கமாய்ப் புழங்குகின்றன என்கி றது காவல்துறை.  இந்த மருந்தின் வீரியம் உடலில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. சிறு நீர்ப்பரிசோதனை, இரத்தப் பரிசோ தனை இவையெல்லாம் கூட இத்தகைய போதை உடலில் இருப் பதைக் காட்டிக் கொடுக் காது. எழுப த்து இரண்டு மணி நேர த்துக்குப் பிற கே உடல் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான விடுதலையைப் பெறும்! அளவுக்கு அதிகமாகக் கொடு த்தால் உயிரே போய்விடும் எனும் அதிகபட்ச ஆபத்தும் இத்தகைய மருந் துகளில் உண்டு.

“இத்தகைய மருந்துகளைத் தான் ரயி லில் பயணிகளுக்கு பிஸ்கட்டில் கலந்து கொடுத்து பொருட்களை லவட்டிக் கொண்டு போகிறார்கள்” என்கின்றனர் இந்திய காவல் துறை அதிகா ரிகள்.

உலகெங்கும் சமீபகாலமாக இந்த டேட் ரேப் மருந்துகளின் விற்பனை பல மட ங்கு அதிகரித்துள்ளன என ஐக்கிய நாடு கள் சபை சமீபத்தில் கவலை தெரிவி த்துள்ளது. அமெரிக்காவில் மட் டும் கடந்த ஆண்டு சுமார் எழுபது இலட்சம் பேர் இத்தகைய மருந்துகளை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியிருக்கி றார்கள்.

இத்தகைய மருந்துகள் மருத்துவத் துறைக்கு மிக மிக முக்கியமா னவை. பல நோய்களுக்கும் அறுவை சிகிச்சை க்கும் இவை தேவை என்பதால் இதைத் தயாரிக்காமல் இருக்க முடியாது. அத னால் உலக நாடுகளெல்லாம் ஒன்றி ணைந்து இந்த டேட் ரேப் மாத்திரை களின் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஐ.நா விண்ணப்பம் வைத்துள்ளது.
வருமுன் காப்பது தான் டேட் ரேப் விஷயத் தில் ஒரே வழி !

 • பலாத்காரம் செய்பவர் சினிமா வில் வரும் வில்லனைப் போல பரட்டைத் தலை, குளிக்காத உடலுடன் வருவார் என நினைக் காதீர்கள். ரொம்ப டீசண்டான  பார்ட்டியாக இருப்பார்.
 • 80 முதல் 90 விழுக்காடு டேட் ரேப்கள் மிகவும் தெரிந்த நபர்களால், அவர்களுடைய அல் லது பெண்களின் வீடுக ளில் வைத்தே நடக்கின்றன. எனவே தெரிந்த ஆள் தானே என அசால்ட்டாக இருக்க வேண்டாம்.
 • பாதி குடித்த மதுவையோ, குளிர் பானத்தையோ வைத்து விட்டு தூரமாய் போகாதீர்கள். குறிப்பாக பாத்ரூம் போகும் நேரத்தில் கூட யாராவது ஒரு சின்ன மாத்திரை போட்டு உங்களை வீழ்த்தி விடலாம் ! எனவே எச்சரிக்கை தேவை.
 • இத்தகைய இடங்களுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாகச் செல்லுங்கள். ஒருவரை ஒருவர் கண்காணித்துக் கொள்ளுங் கள். 
 • உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாத இடங்களுக்குப் போகாதீர்கள். பொது வாக இரவு விடுதி, நடன அரங்கு போ ன்ற இடங்களுக்கு சரியான பாதுகா வலோ, தோழியரோ இல்லாமல் போகவே போகாதீர்கள்.
 • பார்களுக்கோ, மது அருந்தும் இடங்களுக்கோ சென்றால், மதுவையே தொடாத ஒரு நண்பரையும் கூடவே கூட்டிப் போங்கள். 
 • எப்போதும் அலர்ட்டாக இரு ங்கள். ஏதேனும் தவறு நடக் கலாம் என உள்ளுணர்வு எச்சரித்தால் தாமதிக்காமல் வெளியேறிவிடுங்கள்.
 • ரொம்ப அன்பான பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், அல் லது ரொம்ப அமைதியான பெண்கள் தப்பித்துக் கொள் வார்கள் என்றெல்லாம் வீண் கற்பனை வளர்க்க வேண்டாம். பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம். எப்போது வேண்டு மானா லும் நேரிடலாம்.
 • தெரியாத நபர் உங்களுக்கு ஏதேனும் பானத்தை வலியத் தந்தால் வேண் டாம் என நேரடியாகவே மறுத்து விடுங்கள்.
 • இணையத்தின் மூலம் கண்டெடுத்த நண்பர்களுடன் தனியே சந்திப் பதைத் தவிருங்கள். குறிப்பாக அவர்க ளுடன் மதுவெல் லாம் அருந்தவே அருந்தாதீர்கள்.
 • ஆண்களுடன் தனியே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், பாலியல் சார்ந்த உரையாடல்களை தவிர்த்து விடுங்கள். போதை விஷயங்களை யும் தொடாதீர்கள்.
 • உங்கள் டின்னருக்காக ஆண் எவ்வளவு கஷ்டப்பட் டாலும், செலவு செய்தா லும் அதற்காக பாலியல் பரிகாரம் செய்ய வேண் டியதே இல்லை. எந்த நிலை யிலும் உங்கள் உறுதியில் இருந்து சறுக்காதீர்கள். கொஞ்சம் இடம் கொடுத் தால் சிக்கல் பெரிதாகும் என்பது உறுதி.
 • ஒரு வேளை நீங்கள் பாதிக்கப் பட்டால் முதலில் உங்கள் குற்ற உணர்விலிருந்து வெளியே வாரு ங்கள். “ஐயோ என் னால் தான் இப்படி நடந்தது…”, “ நான் இப்படி செய்திருக்கக் கூடாது”, “ நான் நோ சொல்லியிருக்கணும்…” , “நான் சொல்றதை இனிமே யாரும் நம்ப மாட்டாங்க”, “என்னை ரொம்ப மோசமான பொண்ணுன்னு நினைப்பாங்க” என் றெல்லாம் புலம்பாதீர்கள். தைரியமாகக் காவல் நிலையத் தில் புகார் கொடுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: