Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வர்மக்கலை – தற்காப்புக் கலை

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல் லது புள்ளிகளை பற்றிய அறிவைமைய மாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ் ஞானத்தை அடிப்படையாக வைத்து தொட ங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக் கலை யாக வளர்த்தெடுக்கப்பட்டது. .

வர்மம் என்றால் என்ன?

உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அள வில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ”வர்மம்” எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங் களில் நின்று இயங்கும் உயிர் நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது ”உயிர் நிலைகளின் ஓட்டம்” எனக் கூறுவர்.

குண்டலினியும் வர்மக்கலையும்?

வர்மக்கலை பயில்பவர் முதலில் [குண்டலினி] யோக முறை களைப் பற்றி அறிந்து வைத்தி ருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங் களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங் களைப் பற்றிக் கூறுகிறது.

வர்மத்தின் அதிசயங்கள்?

வேறெந்த தற்காப்புக் கலைகளி லோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு

* ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடி முறை உத்திகளும் வர்மக் கலையில் இருப் பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையி லும் இல்லை.

* வெட்டுக் காயங்ளிலிருந்து பீறி டும் இரத்தத் தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட முடியும்.

* ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்த வித மருந்தும் இல்லா மலேயே வர்மக்கலை யின் தடவுமுறைகளால் உடனடி யாகச் சரி செய்து விட முடியும்.

* ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக் கா லில் உள்ள வர்ம அடங்கல் கொண் டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டி விட லாம்.

* நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணை ப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

* மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப் பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன் படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் ரசித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

19 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: