ஜெர்மனி நாட்டை சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், இந்தியாவில் சொகுசு கார் விற் பனையில், முக்கிய இடத்தில் உள் ளது. இந்த நிறுவனம் தற்போது 2 புதிய கார்களை அறிமுகப்படுத் தியுள்ளது. எஸ்எல் 350 என்ற பெயரில் வெளியாகியுள்ள ஸ் போர்ட்ஸ் காரின் விலை ரூ.98.5 லட்சம். இதில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஜிஎல் 500 என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை யும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை ரூ.80.9 லட்சம். இந்த காரில் 5.4 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார், உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த எஸ்.யு.வி., கார் என்ற பெருமைக்குரியது. இந்தி யாவில் எஸ்.யு.வி., காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. என வே, ஜிஎல் 500 காருக்கும் மக்க ளிடம் நல்ல வரவேற்பு கிடைக் கும் என்று பென்ஸ் நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளது. உலகளவில் விற்பனையில் உள்ள பென்ஸ் நிறுவனத்தின் ஏ கிளாஸ் மற்றும் பி கிளாஸ் மாடல் களின் சிறிய ரக கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்