டாடா மோட்டார்ஸ் நிறுவனம், உலகின் மிக விலை குறைந்த கார் எனக் கூறி, நானோ காரை அறிமு கப்படுத்தியது. முன்பதிவு செய்தவர் களுக்கு, டெலிவரி செய்த பிறகு, நானோ கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. பல்வேறு சலுகைகளை அறிவித்த பிறகு, தற் போது நானோ கார் விற்பனை மாதத்துக்கு 10 ஆயி ரம் கார்கள் என்ற அளவுக்கு உயர்ந் துள்ளது. இந்த சூழ்நிலையில், டீஸலி ல் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு இறுதி யில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காருக்கு இப் போதே ஏகப்பட்ட வரவேற்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், டீஸலில் இயங்குவது என்பது மட்டுமல், அதிக மை லேஜ் தரும் என்ற நம்பிக்கையும் தான்.
இந்த சூழ்நிலையில், போஸ்ச் இந்தியா நிறுவனத்தின் மூத்த நிர் வாகி ஒருவர், நானோ டீஸல் கார் குறித்த புதிய தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ டாடா மோட் டார்ஸ் நிறுவனத்தின் பெட் ரோலில் இயங்கும் நானோ கார் உற்பத்தியில் எங்கள் பங்களிப்பும் உண்டு. தற்போது டீஸல் காரை உரு வாக்குவதிலும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த காரில் இரண்டு சிலிண்டர், 700 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட் டுள்ளது. டீஸலை அதிகம் செலவழிக்காமல், அதிக சக்தி யை வழங்கும் இன்ஜின் இது. இந்த கார் எவ்வளவு மைலேஜ் தரும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. எனினும், ஒரு லிட்டர் டீஸலுக்கு 40 கி.மீ., மைலேஜ் தரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். இது மட்டும் உண்மையாக இருந்தால், நானோ டீஸல் காரில் செல்லும் போது ஒரு கி.மீ., துõரத்துக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது குறிப்பி டத்தக்கது. பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், நிஸான் நிறுவனமும் இணைந்து 2012ம் ஆண்டு, சிறிய கார் ஒன்றை அறிமுகப்படுத்த உள் ளன. அந்த காருக்கு, நானோ டீஸல் கார் கடும் போட்டி அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.